கிரிக்கெட் திறனை அதிக மேம்பட்டதாக வங்கதேசம் மாற்றியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தனது ரசிகர் படையை மேன்மேலும் அதிகரித்துள்ளது. வங்கதேசம் தனது முதல் சர்வதேச போட்டியை 1986ல் விளையாடியது. இந்த அணியின் சிறப்பான ஆட்டத்திறன் 2007 உலகக் கோப்பை தொடரில் வெளிபட்டது. அந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வென்று இந்தியாவை வெளியேற்றியது.
அத்துடன் மற்றொரு சிறப்பான ஆட்டம் அதே உலகக் கோப்பை தொடரில் வந்தது. சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது வங்கதேசம். சமீபத்தில் 2016ல் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று தனது முதல் சர்வதேச ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு 2012, 2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சென்றுள்ளது.
வங்கதேச அணி சர்வதேச அரங்கில் தனக்கு கிடைத்த இடத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு தக்கவைத்துக் கொண்டது. சில நாடுகளுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளமால் தற்போது இருக்கின்ற இடம் தெரியாமல் உள்ளது. நாம் இங்கு உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு முன்னதாகவே அறிமுகமான யாரும் அறிந்திராத 3 அணிகளை பற்றி காண்போம்.
#3 கென்யா
2003 உலகக் கோப்பை தொடரில் கென்யா அணி கிரிக்கெட் அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியது. உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அசோசியேசன் அணி அரையிறுதியில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். கென்யா அரையிறுதியில் இந்திய அணியிடம் தோற்று வெளியேறியது. ஆப்பிரிக்க அணிகளுக்கு தற்போது வரை உலகக் கோப்பை எட்டா கனியாக இருந்து வருகிறது.
கென்யா 1996 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக அறிமுகமானது. இதனை ஒருசில ரசிகர்கள் மட்டுமே அறிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த அணி ஐசிசி-யின் முழு உறுப்பினர்களான இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், ஜீம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்த குழுவில் இடம்பெற்றிருந்தது. கென்யா அணி தனது முழு ஆட்டத்திறனையும் வெளிபடுத்தி குழு சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளை தடுமாறச் செய்தது. இருப்பினும் 1996 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாமல் வெளியேறியது.
இந்த அணி 2003 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது ஆனால் முழு இலக்கை அடைய முடியாமல் வெளியேறியது. கென்யா கடைசியாக 2011 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது. அந்த ஆண்டு நடந்த குழு சுற்றில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவி வெளியேறியது.
#2 கனடா
கனடா 1979ல் தனது முதல் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றது. கனாடா மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா அணிகள் தங்கள் முதல் சர்வதேச போட்டியை 1844ல் விளையாடியுள்ளது. இது தற்போது உள்ள தீவிரமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை.
இதன்மூலம் வடக்கு அமெரிக்க நாடுகளில் கிரிக்கெட் மிகவும் விரும்பி விளையாடப்பட்டது என்று நமக்கு தெரிகிறது. ஆனால் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும்போது இந்த அணிகளிடமிருந்து அதிரடி ஆட்டம் வெளிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
20 வருடங்களுக்கு முன்னதாக உலகக் கோப்பை தொடரில் அறிமுகமான கனடா இதுவரை 18 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்று 2ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. 2011 உலகக் கோப்பை தொடரில் கடைசியாக பங்கேற்றது. அந்த தொடரில் குழு சுற்றிலே வெளியேற்றப்பட்டது.
கனடா அணி அமெரிக்க கண்டத்தில் ஒரு சிறப்பான அணி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சர்வதேச அளவில் இந்த அணியிடமிருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படவில்லை என்பது வருத்தம் தரும் நிகழ்வாகும்.