விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றின் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளங்களை கொண்டு மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடத்தப்படும் தொடர்களில் ஒன்று, கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர். இந்தப் பெருமை வாய்ந்த தொடரில் தனது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், இடம்பெறுவது ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் கனவாகும். இதற்காக பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி தமது திறமையை வளர்த்துக் கொண்ட வீரர்கள் ஏராளம். தொடர்ந்து பல ஆண்டு காலமாக விளையாடிய வீரர்கள் கூட கிரிக்கெட் உலக கோப்பை தொடர்களை தவறவிட்டுள்ளனர். இதற்கு எதிர்மாறாக, சில வீரர்கள் 5க்கும் மேற்பட்ட தொடர்களில் கூட விளையாடி சாதனை படைத்துள்ளனர். தற்போது கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 12வது சீசன் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா அணி பலமாக இருந்தாலும் அதற்கு சவால் அளிக்கும் வகையில், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் அதிகமுறை இடம்பெற்றுள்ள வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#4.ரிக்கி பாண்டிங் - ஐந்து தொடர்கள்:
உலக கோப்பை தொடர்களில் தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை செலுத்திய அணிகளில் ஒன்று, ஆஸ்திரேலியா. இந்த அணி மட்டுமே 5 முறை உலக கோப்பை தொடரை வென்றுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், 5 முறை உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். 1996ஆம் ஆண்டு முதல் தொடங்கி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை விளையாடி உள்ளார். தான் அறிமுகம் கண்ட 1996ஆம் ஆண்டிலேயே அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார், ரிக்கி பாண்டிங். இவரது திறமைக்கு அப்பாற்பட்டு, தனது அபார தலைமையின் கீழ் இரு முறை ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பை தொடர்ந்துள்ளார். ஒரு வீரராக மூன்று முறை உலக கோப்பை தொடரை வென்ற அணியில் இடம்பெற்று உள்ளார். இறுதியாக, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கால் இறுதிப் போட்டிக்கு வரை ஆஸ்திரேலியாவை அழைத்துச் சென்றார். இந்தியாவிடம் தோற்ற தொடரில் இருந்து வெளியேறியது, ஆஸ்திரேலிய அணி.
#3.கிறிஸ் கெய்ல் - ஐந்து தொடர்கள்:
கிரிக்கெட் உலகின் பொழுதுபோக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளில் ஒன்று, வெஸ்ட் இண்டீஸ். 1970, 80-களில் உலகின் தலை சிறந்த அணியாக வெஸ்ட்இண்டீஸ் திகழ்ந்தது. முதல் இரு உலக கோப்பை தொடர்களை இந்த அணியே வென்று சாதனை படைத்தது. தொடர்ந்து நீண்ட ஆண்டுகாலமாக, இத்தகைய அணிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் பங்காற்றி வருகிறார், அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். இந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான பிரையன் லாரா மற்றும் சந்திரபால் ஆகியோரின் ஓய்வுக்குப் பின்னர், அணியின் நட்சத்திர தொடக்ககாரராக தனது பொறுப்பை உணர்ந்து பேட்டிங்கிற்கு வலு சேர்க்கும் வகையில் விளையாடிக் கொண்டிருக்கிறார், கெய்ல். இவர் இதுவரை நான்கு முறையும் தற்போது நடந்து வரும் 2019 உலகக்கோப்பை தொடர் உட்பட ஐந்து தொடர்களில் விளையாடி உள்ளார். 2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகம் கண்ட இவர், கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இரட்டை சதம் அடித்து உலக கோப்பை தொடரில் இரட்டை சதத்தை பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உலகக் கோப்பை கிரிக்கெட் வாழ்வில் பங்கேற்ற ஐந்து வெவ்வேறு தொடர்களும் ஐந்து வெவ்வேறு கண்டங்களில் நடைபெற்றுள்ளது என்பது மற்றுமொரு சிறப்பாகும்.