கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான தொடர் உலகக்கோப்பை. ஒரு நீண்டகாலம் உலகச் சேம்பியன்களாக வலம் வர இத்தொடர் பெரிதும் உதவியாக உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தொடருக்கு எதிர்பார்ப்பு மட்டும் எப்போதும் குறையாது.
கிரிக்கெட்டில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால் பேட்ஸ்மேன்கள் அதிக ஆதிக்கத்தை செலுத்துவார்கள். ஆடுகளத் தன்மை, பவுண்டரி திசை குறைவு, சற்று மோசமான ஃபீல்டிங் போன்றன பேட்ஸ்மேன்களின் ஆதிக்கத்திற்து முண்ணனி காரணங்களாக அமைந்தது.
இருப்பினும் சில பௌலிங் திறனும் போட்டியின் போக்கை மாற்றி அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. நாம் இங்கு உலகக்கோப்பை வரலாற்றில் சிறந்த 3 பௌலிங்கை பற்றி காண்போம்.
#3 டிம் சௌதி ( இங்கிலாந்திற்கு எதிராக 7-33, 2015)
உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் சௌதி 2008ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். தற்போது நியூசிலாந்து அணியின் வழக்கமான பௌலராக வலம் வருகிறார்.
2015 ஐசிசி உலகக் கோப்பை தொடரில் டிம் சௌதி தனது அதிரிடி பந்துவீச்சை, மிகுந்த வலிமை கொண்ட இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக வெளிபடுத்தினார். இவரது ஸ்விங் வேகப்பந்து வீச்சின் மூலம் சிறந்த பேட்ஸ்மேன்களையும் எளிதாக வீழ்த்தினார்.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான இவர் 9 ஓவர்கள் வீசி 33 ரன்களை அளித்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்து அணியை 123 ரன்களுக்குள் சுருட்ட பெரும் பங்களிப்பை அளித்தார். இவர் இயான் பெல், ஜோ ரூட், இயான் மோர்கன் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை தனது அதிரடி பந்துவீச்சினால் வீழ்த்தினார்.
நியூசிலாந்து அணி இந்த இலக்கை 73 பந்துகளில் எட்டியது. தனது சிறப்பான பௌலிங்கிற்காக டிம் சௌதி ஆட்டநாயகன் விருதினை வென்றார். டிம் சௌதி 2015 உலகக்கோப்பை தொடரில் 9 போட்டிகளில் பங்கேற்று 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
#2 ஆண்டி பிச்செல் ( இங்கிலாந்திற்கு எதிராக 7-20, 2003)
ஆண்டி பிக்கில் 1997ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அறிமுகமானார். தனது முதல் சர்வதேச போட்டியிலேயே தான் வீசிய 3 வது ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார். இருப்பினும் ஆஸ்திரேலிய அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள தவறிவிட்டார். பின்னர் மீண்டும் 2002ல் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி, தனது ஆல்ரவுண்டர் திறனால் அந்த அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தார்.
2003 உலகக்கோப்பை தொடரின் 33வது போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்கை தனது மிதவேக சுழற்பந்தின் மூலம் சிதைத்தார். ஆரம்பத்தில் 66/0 என்ற இங்கிலாந்து அணியை அடுத்த 8 ஓவர்களில் 87/5 ஆக மாற்றினார்.
ஆண்டி பிக்கில் இப்போட்டியில் 10 ஓவர்களை வீசி 20 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து 204 என்ற சுமாரன ரன்களையே அடிக்க முடிந்தது. இருப்பினும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அதிரடி பௌலிங்கை வெளிபடுத்தி 135 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகளை இழ்ந்து தடுமாறிய போது ஆண்டி பிக்கில் 9வது விக்கெட்டிற்கு 73 ரன்கள் பார்டனர் ஷீப் செய்து ஒரு கணிக்க முடியாத வெற்றியை ஆஸ்திரேலியாவிற்கு பெற்றுத் தந்தார்.
#1 க்ளன் மெக்ராத் ( நமிபியாவிற்கு எதிராக 7-15, 2003)
கிரிக்கெட்டின் சிறந்த வேகப்பந்து வீச்சின் அடையாளமாக க்ளன் மெக்ராத் உள்ளார். வேகப்பந்து வீச்சில் மெக்ராத்தின் அர்பணிப்பு ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பலமாக கடந்த காலத்தில் இருந்தது. இவர் 1993ல் அறிமுகமான முதல் ஆஸ்திரேலிய அணியின் வழக்கமான வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தார். இரு நூற்றாண்டாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை நிர்வகித்தார்.
மெக்ராத்தின் அப்பழுக்கற்ற லைன் மற்றும் லென்த் பௌலிங் மூலம் இவரை சமாளிக்க பேட்ஸ்மேன்கள் பெரிதும் தடுமாறினர். 2003 உலகக்கோப்பை தொடரில் 31வது போட்டியில் நமீபியாவிற்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்தார்.
இவர் இந்த போட்டியில் 7 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டுமே அளித்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் நமிபியா 14 ஓவர்கள் மட்டுமே எதிர்கொண்டு 45 என்ற மிக மிக குறைந்த ரன்களில் சுருண்டது. இதுவே உலகக்கோப்பை வரலாற்றில் தற்போது வரை சிறந்த பௌலிங் ஆட்டத்திறனாக உள்ளது.
க்ளன் மெக்ராத் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நீண்ட வருடங்கள் ஆனாலும் தற்போது வரை இவரது சாதனை உலகக்கோப்பை வரலாற்றில் நீங்கா இடத்தில் உள்ளது. அத்துடன் உலகக்கோப்பையில் 39 போட்டிகளில் பங்கேற்று 71 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சாதனையும் தற்போது வரை யாரலும் நெருங்க முடியவில்லை.