#1 க்ளன் மெக்ராத் ( நமிபியாவிற்கு எதிராக 7-15, 2003)
கிரிக்கெட்டின் சிறந்த வேகப்பந்து வீச்சின் அடையாளமாக க்ளன் மெக்ராத் உள்ளார். வேகப்பந்து வீச்சில் மெக்ராத்தின் அர்பணிப்பு ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பலமாக கடந்த காலத்தில் இருந்தது. இவர் 1993ல் அறிமுகமான முதல் ஆஸ்திரேலிய அணியின் வழக்கமான வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தார். இரு நூற்றாண்டாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சை நிர்வகித்தார்.
மெக்ராத்தின் அப்பழுக்கற்ற லைன் மற்றும் லென்த் பௌலிங் மூலம் இவரை சமாளிக்க பேட்ஸ்மேன்கள் பெரிதும் தடுமாறினர். 2003 உலகக்கோப்பை தொடரில் 31வது போட்டியில் நமீபியாவிற்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்தார்.
இவர் இந்த போட்டியில் 7 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டுமே அளித்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் நமிபியா 14 ஓவர்கள் மட்டுமே எதிர்கொண்டு 45 என்ற மிக மிக குறைந்த ரன்களில் சுருண்டது. இதுவே உலகக்கோப்பை வரலாற்றில் தற்போது வரை சிறந்த பௌலிங் ஆட்டத்திறனாக உள்ளது.
க்ளன் மெக்ராத் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நீண்ட வருடங்கள் ஆனாலும் தற்போது வரை இவரது சாதனை உலகக்கோப்பை வரலாற்றில் நீங்கா இடத்தில் உள்ளது. அத்துடன் உலகக்கோப்பையில் 39 போட்டிகளில் பங்கேற்று 71 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சாதனையும் தற்போது வரை யாரலும் நெருங்க முடியவில்லை.