உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான உலகக் கோப்பை தொடர் மே 30 அன்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்க உள்ளது. 2019 உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள 10 அணிகளிலும் சிறப்பான கேப்டன்கள் அணியை வழிநடத்த இருக்கின்றார்கள். கேப்டன் என்பவர் ஒரு அணிக்கு மிகவும் முக்கியமான ஒருவரவார். களத்திலும், வெளியிலும் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முடிவு ஒரு அணியின் கேப்டனுக்கே முழு அதிகாரம் உண்டு
ஒரு அணியின் வெற்றியில் அந்த அணியின் கேப்டனுக்கே அதிக பங்களிப்பு இருக்கும். அத்துடன் அந்த அணியின் தோல்விக்கும் கேப்டனே பொறுப்பேற்க வேண்டும். உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் ஒரு அணியின் கேப்டனின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் கேப்டனின் முடிவு மிக முக்கியமான ஒன்றாகும்.
உலக கிரிக்கெட்டில் கிளைவ் லாய்ட், ரிக்கி பாண்டிங், எம்.எஸ்.தோனி மற்றும் பல சிறந்த கேப்டன்கள் வலம் வந்துள்ளனர். நாம் இங்கு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டனாக அதிக போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்களை பற்றி காண்போம்.
#3 முகமது அஷாரூதின் (23 போட்டிகள்)
முன்னாள் இந்திய கேப்டன் முகமது அஷாரூதின் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். தனது முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3 சதங்களை விளாசி சாதனை படைத்த முகமது அஷாரூதின் 1980-களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
முகமது அஷாரூதின் 1992, 1997 மற்றும் 1999 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் 23 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். ஆனால் உலகக் கோப்பையில் இவரது கேப்டன் ஷீப்பில் இந்திய அணி அவ்வளவாக வெற்றி பெற்றதில்லை.
உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி இவரது கேப்டன் ஷீப்பில் 12 போட்டிகளில் தோல்வியும், 10 போட்டிகளில் மட்டும் வெற்றியும் பெற்றுள்ளது. 1992லிருந்து 1999 வரையிலான காலகட்டத்தில் முகமது அஷாரூதின் தலைமையிலான இந்திய அணி 45.45 சதவீத வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
சிறப்பான வலதுகை பேட்ஸ்மேனான அஷாரூதின் உலகக் கோப்பை தொடரில் சில சிறப்பான பேட்டிங் சாதனைகளை கொண்டுள்ளார். இந்த தொடரில் இவரது பேட்டிங் சராசரி 39.88 ஆகவும், அதிகபட்ச ரன்களாக 93 உள்ளது.
#2 ஸ்டிபன் பிளமிங் (27 போட்டிகள்)
முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டிபன் பிளமிங் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அனுபவ ஆட்டக்காரரான ஸ்டிபன் பிளமிங் 1996 உலகக் கோப்பை தொடரில் அறிமுக வீரராக களமிறங்கினார். 1999ல் நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2007 உலகக் கோப்பை வரை நியூசிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
2000ல் நடந்த சேம்பியன் டிராபியில் கோப்பையை வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் ஸ்டிபன் பிளமிங் 27 உலகக் கோப்பை போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி உலகக் கோப்பையில் இவரது தலைமையில் 16 போட்டிகளில் வெற்றியும் 10 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.
தனது தனியை கட்டுக்குள் வைத்திருந்த ஸ்டிபன் பிளமிங் ஒரு சிறந்த நியூசிலாந்து கேப்டன் ஆவார். இவரது சிறப்பான கேப்டன் ஷீப் திறனை நியூசிலாந்து அணி வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு விளையாடவில்லை. இவரது கேப்டன் ஷீப்பில் நியூசிலாந்து 44.95 சதவீதம் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் இவரது வெற்றி சதவீதம் 61.43 சதவீதமாக உயர்ந்து காணப்படுகிறது. இவரது தலைமையில் நியூசிலாந்து அணி 1999 மற்றும் 2007 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் பங்கேற்றது. ஆனால் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியினால் அரையிறுதியில் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஒரு பேட்ஸ்மேனாக ஸ்டிபன் பிளமிங் அதிக சாதனைகளை உலகக் கோப்பை தொடரில் படைத்துள்ளார். இவர் 2 உலகக் கோப்பை தொடர்களில் கேப்டனாக பங்கேற்று மொத்தமாக 37 சராசரியுடன் 882 ரன்களை குவித்துள்ளார்.
#1 ரிக்கி பாண்டிங் (29 போட்டிகள்)
உலக கோப்பை கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ள ரிக்கி பாண்டிங் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான இவர் 2003 மற்றும் 2007 உலகக் கோப்பை தொடரை தன் சிறப்பான கேப்டன் ஷீப் மூலம் வென்றார்.
2011 உலகக் கோப்பை தொடரிலும் ரிக்கி பாண்டிங் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் காலிறுதியில் இந்திய அணியினரால் வெளியேற்றப்பட்டார். ஒட்டுமொத்தமாக உலக கோப்பையில் ரிக்கி பாண்டிங் 29 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி 26 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 92.85 சதவீத போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1996 உலகக் கோப்பை தொடரில் அறிமுகமான ரிக்கி பாண்டிங் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில்(46) விளையாடியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் ரிக்கி பாண்டிங் சிறந்த பேட்டிங் ஆட்டத்திறனை உலகக்கோப்பை தொடர்களில் வெளிப்படுத்தியுள்ளார். இவர் உலகக் கோப்பையில் கேப்டனாக 52.72 சராசரியுடன் 1160 ரன்களை குவித்துள்ளார்.