கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் வீரர்கள் ஊக்கமருந்தை பயன்படுத்துவதை தடுக்க மற்றும் கண்டுபிடிக்க உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது எந்த வீரர்களின் ஆட்டத்தில் சந்தேகம் வருகிறதோ அவர்களிடம் ஊக்கமருந்து பரிசோதனையை மேற்கொள்கிறது. இந்த நிறுவனமானது வெறும் கிரிக்கெட் மட்டுமல்ல அனைத்து விளையாட்டு தொடர்பான ஊக்கமருந்து சோதனைகளையும் மேற்கொள்கிறது. இந்த ஆய்வின் மூலம் ஊக்கமருந்தினை வீரர்கள் பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்படுமானால் அந்த வீரர்களுக்கு சில ஆண்டு காலங்கள் விளையாட தடை செய்யப்படுவர். சமீபத்தில் கூட இந்திய அணியின் இளம் வீரர் பிரித்திவி ஷா இந்த ஊக்கமருத்து சோதனையில் சிக்கி தற்போது 3 மாதங்கள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார். அந்தவகையில் இதுவரை இந்த ஊக்கமருந்து சோதனையில் சிக்கி தடை செய்யப்பட்ட வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
#1) ஷேன் வார்னே
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான வார்னேவின் பெயர் இந்த வரிசையில் இடம் பெறுவது உங்களுக்கு ஆச்சர்யமளிக்கலாம். 2000 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியில் டெஸ்ட் போட்டிகளில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார் இவர். இவர் தனது அசாத்திய சுழல் பந்துவீச்சினால் இவர் மீது பலருக்கும் சந்தேகம் வந்தது. அந்தவகையில் இவர் மீது ஊக்கமருந்து ஒழிப்பு நிறுவனம் சோதனை நடத்தியது. அதாவது 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதலாவது போட்டியில் இவர் மீது அனைவருக்கும் சந்தேகம் வரவே நடத்தப்பட்ட சோதனையில் இவர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து இவரிடம் கேட்டகப்பட அதற்க்கு அவர் தனது தாய் தன் உடல் எடையை குறைப்பதற்காக மருந்து கொடுத்ததாகவும் , அதனையே தான் உட்கொண்டதாகவும் கூறினார். இந்நிலையில் இவரை 12 மாதங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை செய்தது ஐசிசி. இதன் பின் 2004 ஆம் ஆண்டு இவர் மீண்டும் தனது கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்தார்.
#2) ஐயான் போதம்
இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஐயான் போதம். அப்போதைய இங்கிலாந்து அணியில் முக்கிய இடத்தினையும் பிடித்திருந்தார் இவர். இந்நிலையில் 1986-ல் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் தான் ஊக்கமருந்தை பயன்படுத்தியதை தாமாக முன்வந்து ஒப்புக்கொண்டார் இவர். எனவே இவரை இங்கிலாந்து அணி நிர்வாகம் 63 நாட்களுக்கு விளையாட தடை செய்தது. இவர் இல்லாததன் காரணத்தினால் இங்கிலாந்து அணியானது இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளிடம் படுமோசமாக தோல்வியை தழுவியது. அதன் பின்னர் மீண்டும் இவர் அணிக்கு திரும்பிய பின்னர் வீசிய 12 பந்துகளிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்தார்.
#3) சோயிப் அக்தர்
ஊக்கமருந்து மற்றும் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்பட்ட காயத்தினை விரைவில் குணப்படுத்தலாம், அதுமட்டுமல்லாமல் இது வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவானான அக்தர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் பங்கேற்பதற்கு ஒரு நாள் முன்னர் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். இதன் மூலம் இவரை பாக்கிஸ்தான் அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு விளையாட தடை செய்தது.
#4) ஸ்டீபன் பிளமிங்
தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரும் நியூஸிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளருமான பிளமிங்-ம் இந்த பட்டியலில் முக்கிய இடம் வகிக்கிறார். இவர் நியூஸிலாந்து அணியை தனது திறமையான கேப்டன்ஷி-யால் பல போட்டிகளால் வெற்றி கண்டுள்ளார். இவர் பெரிதாக ஊக்கமருந்துகள் எதுவும் பயன்படுத்தவில்லை. தனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்ததால் அதில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள்களை பயன்படுத்தியுள்ளார் . இதன் மூலம் இவர் மட்டுமல்லாமல் இவருடன் இணைந்து ஒரு சில நியூஸிலாந்து வீரர்களும் 1993-94 காலகட்டத்தில் இந்த விவகாரகத்தில் சிக்கினர்.இதன் மூலம் இவருக்கு 174 டாலர் அபராத தொகையாக நிர்ணயிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இவரை அப்போதைய மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை செய்தது அணி நிர்வாகம்.