நடந்தது என்ன?
2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லுங்கி நிகிடிக்கு மாற்று வீரராக நியூசிலாந்து பௌலிங் ஆல்-ரவுண்டர் ஸ்காட் குஜ்லெஜினை தேர்வு செய்துள்ளது. இவ்வருட ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்பாகவே லுங்கி நிகிடிக்கு காயம் ஏற்பட்டு முழு ஐபிஎல் சீசனிலிருந்தும் விலகினார்.
பிண்ணனி
தென்னாப்பிரிக்கா பௌலர் லுங்கி நிகிடி மார்ச் மாதத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் அடைந்தார். இதனால் நிகிடி 2019 ஐபிஎல் தொடர் முழுவதும் விலகியுள்ளார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் நிகிடிக்கு மாற்று வீரரை அறிவித்துள்ளது.
டேவிட் வில்லி சொந்த காரணங்களால் நேற்று இவ்வருட ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்த இங்கிலாந்து பௌலருக்கு மாற்று வீரரை சென்னை அணி தேடி வருகிறது.
கதைக்கரு
27 வயதான நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஸ்காட் குஜ்லெஜின் தன்னுடைய தேசிய அணியில் 4 டி20 போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் கடைநிலையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர். இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது நியூசிலாந்து அணியில் ஸ்காட் குஜ்லெஜின் இடம்பெற்றிருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டிபன் பிளமிங், ஸ்காட் குஜ்லெஜினை பற்றி கூறியதாவது, "லுங்கி நிகிடிக்கு மாற்று வீரராக ஸாகாட் குஜ்லெஜின் சேர்க்கப்படுகிறார். இவர் பௌலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்தும் திறமை படைத்துள்ளார். எனவே வெவ்வேறு கோணங்களில் வீசும் இவரது பந்துவீச்சு மற்றும் இவரது ஆல்-ரவுண்டர் திறனை சென்னை அணி பயன்படுத்தப்போகிறது. இவர் எதிர் வரும் வாரத்தில் அணியில் இணைய உள்ளார்".
செய்தியாளர்கள் சந்திப்பில் டேவிட் வில்லிக்கான மாற்று வீரர் தேர்வு பற்றியும் ஸ்டிபன் பிளமிங் விவாதித்தார்.
ஸ்காட் குஜ்லெஜின் வருகையால் எம்.எஸ்.தோனி அவரை சரியாக பயன்படுத்துவார். டேவிட் வில்லிக்கு தோனி மாற்று வெளிநாட்டு பந்துவீச்சாளரை தேவையென நினைத்தால் மாற்று வீரர் அறிவிக்கப்படுவார். டுவெய்ன் பிராவோ சில ஐபிஎல் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டு குஜ்லெஜினை பயன்படுத்தி பார்க்கப்படும். இவர் தனது ஆட்டத்திறனை சென்னை அணிக்காக வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அதிரடி தொடக்கத்தை வெளிபடுத்தியுள்ளது. சென்னை அணி ஏப்ரல் 1 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ளவிருக்கிறது. டேவிட் வில்லிக்கு மாற்று வீரரை தோனி விரும்ப மாட்டார் என தெரிகிறது. ஏனெனில் தேவைக்கேற்ற அளவு சுழற்பந்து வீச்சு மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டும் சிறப்பாக உள்ளது. 2019 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு வெளிநாட்டு வீரர் கூட தேர்வு செய்ய முடியாத அளவிற்கு போதிய வீரர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.