சென்னை அணியில் மற்றோரு நட்சத்திர வீரர் காயம் காரணமாக விலகினார்.

Pravin
தோனி பிராவோ
தோனி பிராவோ

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 17 லீக் போட்டிகள் நடைபெற்று உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் எட்டு அணிகளும் இதுவரை நான்கு போட்டிகள் விளையாடி உள்ளனர். இந்த ஐபிஎல் சீசன் போட்டிகள் தற்பொழுது சூடுபிடித்துள்ளது. இந்த சீசனில் சிறப்பான தொடக்கத்தை சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் கொடுத்துள்ளனர். உலக கோப்பை தொடர் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் முக்கியமான வீரர்கள் காயம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து ஏற்கனவே லுங்கி இங்கிடி போன்ற வீரர்கள் காயம் காரணமாக தொடரை விட்ட விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர வீரர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். யார் என்பதை இங்கு பார்ப்போம்.

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரின் முதல் லீக் போட்டியிலேயே தனது வெற்றி கணக்கை தொடங்கியது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை நான்கு போட்டிகள் விளையாடி உள்ளது. நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் பெங்களுரு அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை சென்னை அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்ற நிலையில் நான்காவது போட்டியில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இந்த நான்கு போட்டிகளிலும் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி அனுபவ வீரர் டுவைன் பிராவோ மும்பை அணிக்கு எதிரான போட்டியில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இருந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு விலகியுள்ளார். இவர் காயம் காரணமாக விலகியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய இழப்பு எற்பட்டுள்ளது.

டுவைன் பிராவோ
டுவைன் பிராவோ

இதுவரை அனைத்து சீசன்களிலும் சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருபவர் டுவைன் பிராவோ. இவர் கடைசியாக விளையாடிய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்காக புதிய சாதனையை படைத்தார். சென்னை அணிக்காக விளையாடி 100 விக்கெட்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். சென்னை அணிக்காக விளையாடிய வீரர்களின் பட்டியலில் டுவைன் பிராவோ 100 விக்கெட்கள், ரவிசந்திர அஸ்வின் 93, அல்பி மோர்க்கல் 76 விக்கெட்களை எடுத்துள்ளனர்.

டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவுள்ளதால் சென்னை அணி புதிய வீரரை களம் இறக்க வேண்டிய கட்டயத்தில் உள்ளது. சென்னை அணியில் எற்கனவே லுங்கி இங்கிடி மற்றும் டேவிட் வில்லி இருவரும் இந்த தொடரை விட்டு விலகிய நிலையில் லுங்கி இங்கிடி பதில் நியுசிலாந்து அணியின் புதிய ஆல்ரவுண்டர் ஸ்காட் குஜ்லெஜினை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது. டுவைன் பிராவோ இந்த ஐபிஎல் சீசன் இறுதியில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார் என எதிர்பாக்கப்படுகிறது.

Quick Links

App download animated image Get the free App now