நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), 2019-ஆம் ஆண்டு சீசனுக்காக தனது அணியில் 22 பேரை தக்க வைத்துக்கொள்கிறது. 3 வீரர்களை மட்டும் விடுவிக்கிறது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் விடுவிக்கபடுவதாகவும் இந்தியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் கனிஷ்க் சேத் மற்றும் சதிஸ் சர்மா ஆகியோர் விடுவிக்க படுவதாக அறிவித்திருந்தனர். மார்க்வுட் சென்னை அணிக்காக ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே ஆடியிருந்தார் மற்ற இருவரும் சென்னை அணிக்காக ஒரு ஆட்டத்தில் கூட பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் காயம் காரணமாக ஆடாமல் இருந்த நியூசிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் மிட்செல் சாண்ட்சர் விடுவிக்கபடாமல் அணியில் தொடர்கிறார்.காயம் குணமாகி அணிக்கு மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கபடுவதால் அவருக்கான மாற்று வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோர வில்லை.டிசம்பர் 15 ல் 8.5 கோடி ரூபாயுடன் ஏலத்தில் பங்கேற்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
2019 ஆம் ஆண்டு சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 15 ல் நடைபெற இருக்கிறது.எனவே அனைத்து அணிகளுகம் தாங்கள் தக்க வைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் விவரங்களை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் அறிவிக்க வலியுறுத்தி இருந்தனர்.அனைத்து அணிகளும் தங்களது அணி விவரங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அவருக்கு அணி நிர்வாகத்திடம் இருந்து எஸ் எம் எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எந்த தகுந்த காரணங்களும் நிர்வாகத்தினர் வெளியிடவில்லை.
இருப்பினும் அடுத்த சீசனுக்கு அவர் தயார் நிலையில் இருப்பாரா என்ற கேள்வியை மனதில் கொண்டு இந்த முடிவினை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் முடிவு செய்திருக்கலாம் ஸ்டார்க்குக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த வேக பந்து வீச்சாளரான டாம் கரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து புதன்கிழமை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஸ்டார்க்
இரண்டு நாட்களுக்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர்களிலம் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது.அதில் தான் அணியில் இருந்து விடுவிக்கபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக மிட்செல் ஸ்டார்க் கூறினார் மற்றும் ஐபிஎல்லில் பங்கேற்காதது பற்றி எந்த கவலையும் இல்லை அது நடக்க இருக்கும் உலககோப்பை தொடரில் பங்கேற்க தனது உடலை தயார் படுத்த தகுந்த வாய்ப்பு கிடைக்கும் எனவும் மேலும் நடக்கவிருக்கும் கவுண்டி தொடருக்கு தயாராவதாகவும் தெரிவித்தார்.
கடந்த சீசனில் அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கபட்ட வீரர்களில் மிட்செல் ஸ்டார்க்கும் ஒருவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்தால் 1.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.இருப்பினும் வலது காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஸ்டார்க் கடந்த சீசன் முழுவதும் ஒரு ஆட்டத்தில் கூட பங்கேற்க வில்லை.
இதே போன்று கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடிய க்யூட்டன் டிகாக் இந்த முறை மும்பை அணிக்காக ஆடவுள்ளார்.
சிகார் தவான் ஹைதராபாத் அணியில் இருந்து விலகி டெல்லி அணிக்கு ஆட வாய்ப்பிருக்கிறது.