Create
Notifications
Favorites Edit
Advertisement

சென்னை அணிக்கு குறைந்த தொகையில் அதிக பலனை ஈட்டிய 3 வீரர்கள்

SENIOR ANALYST
சிறப்பு
8.26K   //    Timeless

TOP 3 smartest picks by chennai super kings in 2018 IPL
TOP 3 smartest picks by chennai super kings in 2018 IPL

ஐபிஎல் வரலாற்றில் ஒரு வெற்றிகரமான அணி என்று கூறினால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். ஏனெனில், ஐபிஎல் தொடங்கிய காலம் முதலே தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது, இந்த சென்னை அணி.3 ஐபிஎல் பட்டங்கள் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களே இந்த அணியின் பெருமையை எடுத்துரைக்கின்றது.இரண்டு வருட தடைக்கு பின்னர் மீண்டு வந்து கோப்பையையும் வென்றுள்ளது, இந்த சென்னை சூப்பர் கிங்ஸ். தோனியை போன்ற சிறந்த கேப்டனை கொண்ட ஒரு தகுந்த தலைமையும் திறமையுள்ள வீரர்களை ஏலத்தில் எடுக்கும் சாதுரியமும்  கூட இந்த தொடர் வெற்றிகளுக்கு காரணமாய் உள்ளது. சென்னை அணியில் சர்வதேச டி20 அனுபவமுள்ள வீரர்கள் இருக்கின்றனர். ஆனால், அணி நிர்வாகம், ஏலத்தில் அவர்கள் போன்ற வீரர்களுக்கு அதிக தொகைக்கு போட்டியிட்டதில்லை. மாறாக, உள்ளூர் மற்றும் டிஎன்பிஎல் போட்டிகளில் ஜொலிக்கும் திறமை உள்ள வீரர்களை எடுக்கவே அதிகளவில் ஆர்வம் காட்டப்படுகின்றது. சர்வதேச மற்றும் இந்திய வீரர்களின்   ஒருங்கிணைந்த பங்கு  அணியின் ஆடும் லெவனில் என்றுமே இருந்து வருகிறது.குறிப்பாக, குறைந்த தொகையில் ஏலத்தில் எடுக்க பட்ட வீரர்கள் அந்த தொடரின் நாயகர்களாக மாறியுள்ளனர். எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு   சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட அம்பத்தி ராயுடு, அந்த தொடர் முழுவதுமே விளையாடி அணியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்று, கோப்பையை  வெல்ல காரணமாகவும் அமைந்தார். அது போன்ற குறைந்த தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு அணிக்கு பெரும் பயனளித்த வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.

3. லுங்கி  இங்கிடி:

Lungi takes 4 wickets against KXIP
Lungi takes 4 wickets against KXIP

சர்வதேச போட்டிகளில் தென்னாபிரிக்க அணிக்காக ரபாடாவுடன் இணைந்து தனது பவுலிங் தாக்குதலால் பெயர் பெற்றவர் இந்த லுங்கி. இந்த வருடம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் அடையாளம் காணப்பட்டார். 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில், தனது  முதல் சர்வதேச போட்டியிலே ஆட்டநாயகன் விருதை பெற்றார். மேலும், அந்த தொடரில் சாதாரணமாக 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசி அசத்தினார். சென்னை அணி நிர்வாகமும் ஒரு சிறந்த பந்து வீச்சாளரை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டது. இதனால், ஏலத்தில் சென்னை அணியை பெரிதும் ஈர்த்த இவரை வேறு எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இதனால், 50 லட்சம் என்ற அடிப்படை  தொகையில் சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது பந்துவீச்சு எக்கானமி 6 ரன்களுக்கு மிகாமல் வைத்து அசத்தினார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்ததே இவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். இளம் வீரரான இவர் தொடர்ந்து பல ஆண்டுகள் சென்னை அணிக்காக  விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கலாம்.

1 / 2 NEXT
Advertisement
Advertisement
Fetching more content...