சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தியன் பிரீமியர் லீக்கின் மிகவும் வெற்றிகரமான அணியாகும். இரண்டு வருடம் தடைக்கு பிறகு 2018ஆம் ஆண்டு காலடியெடுத்து வைத்து ஹைதராபாத் அணிக்கு எதிராக இறுதி போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை தட்டி சென்றது.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் வருகின்ற மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஐ.பி.எல் போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகள் அனைத்தும், சில வீரர்களை தனது அணியில் தக்கவைத்து கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தனர். சென்னை அணி தனது அனைத்து வீரர்களையும் தக்கவைத்து கொண்டு வெறும் மூன்று வீரர்களை மட்டுமே விடுவித்தனர்.
2019 ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. சென்னை அணிக்கு இரண்டு வீரர்கள் தேவை. கைவசம் சென்னை அணியிடம் 10.40 கோடி மட்டுமே இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள், யுவராஜ் சிங் சென்னை அணிக்கு விளையாட வேண்டும் என்றும் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால், சென்னை அணியின் மேலாண்மை குழு யுவராஜ் சிங் அவர்களை ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை. ஜெயதேவ் உனட்கட், முகமத் ஷமி அவர்கள் இருவரையும் ஏலத்தில் எடுக்க சென்னை அணி முயன்றது. ஆனால் அவர்கள் இருவரும் பெரும் தொகைக்கு ஏலத்தில் சென்றதால் சென்னை அணியால் அவர்களை எடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் மோஹித் ஷர்மா ஏலத்தில் வந்தார். சென்னை அணி மோஹித் ஷர்மா அவர்களை ஏலத்தில் எடுக்க மிகவும் ஆர்வம் காட்டினார்கள். இறுதியில் மோஹித் சர்மா அவர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏற்கனவே மோஹித் ஷர்மா விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மோஹித் ஷர்மா அவரின் பந்து வீச்சு மிகவும் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் கடந்த ஐ.பி.எல் போட்டியில் இருந்தது. கடந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இறுதி ஓவர் நன்றாக பந்து வீசி பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடி தந்தார் மோஹித் ஷர்மா. அந்த போட்டியில் இறுதி ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மஹிந்திரா சிங் தோனி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோஹித் ஷர்மா சென்னை அணிக்கு வந்து இருப்பது சென்னை அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ஏலத்தில் ஒரு இளம் வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. அவர் பெயர் ருதுராஜ் கெய்க்வாட். வெறும் 21 வயது ஆகும் இளம் வீரரான இவர் மகாராஷ்டிரா கிரிக்கெட் அணிக்காக விளையாடி உள்ளார். வலது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை ஆப்-பிரேக் பந்துவீச்சாளர் ஆவார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு வீரர்கள் பட்டியல் -
மஹிந்திரா சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், டூ பிளஸிஸ், முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஹர்பஜன் சிங், தீபக் சாகர், இம்ரான் தாஹிர், லுங்கி நிகிடி, கேதார் ஜாதவ், கே.எம் ஆசிப், கரண் ஷர்மா, சாம் பில்லிங்ஸ், மிட்செல் சாண்ட்னர், ஜெகதீசன், ஷர்டுல் தாகூர், மோனு குமார், துருவ் ஷோரி, டேவிட் வில்லி, சையத்யா பிஷ்னோய், மொஹித் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட்