சிறப்பான பந்து வீச்சின் மூலம் பஞ்சாப் அணியை வீழ்த்தியது சென்னை அணி

Pravin
பாப் டுப் ப்ளாஸிஸ்
பாப் டுப் ப்ளாஸிஸ்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் உள்ள எட்டு நகரங்களில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி சென்னையில் உள்ள M.A.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் விளையாடும் இரு அணிகளும் நான்கு போட்டிகள் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளனர். இந்த போட்டியில் சென்னை அணியில் பாப் டுப் ப்ளாஸிஸ் மற்றும் ஸ்காட் குஜ்ஜெலின் இருவரும் அணியில் இடம் பிடித்தனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் பாப் டுப் ப்ளாஸிஸ் மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை தொடக்கத்திலிருந்து வெளிபடுத்தினர். அதிரடியாக விளையாடிய ஷேன் வாட்சன் 26 ரன்னில் ரவிசந்திர அஸ்வின் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா நிலைத்து விளையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய பாப் டுப் ப்ளாஸிஸ் அரைசதம் வீளாசினார். அதை எடுத்து ரவிசந்திர அஸ்வின் வீசிய ஓவரில் பாப் டுப் ப்ளாஸிஸ் 54 ரன்னில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து அடுத்த பந்திலேயே சுரேஷ் ரெய்னா 17 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

தோனி
தோனி

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மகேந்திர சிங் தோனி மற்றும் அம்பத்தி ராய்டு இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய தோனி 37 ரன்கள் எடுத்தார். அம்பத்தி ராய்டு 21 ரன்கள் எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 160-3 ரன்கள் எடுத்தது.

அதன் பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கிரிஸ் கெயில் மற்றும் லோகேஸ் ராகுல் இருவரும் களம் இறங்கினர். அதிரடி வீரர் கிரிஸ் கெயில் 5 ரன்னில் ஹர்பஜன் சிங் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய மயான்க் அகர்வால் வந்த இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சர்ஃப்ராஸ் கான் மற்றும் லோகேஸ் ராகுல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். சிறப்பாக விளையாடிய சர்ஃப்ராஸ் கான் அரைசதம் வீளாசினார். மற்றொரு முனையில் நிலைத்து விளையாடிய லோகேஸ் ராகுலும் அரைசதம் வீளாசினார்.

சர்ஃப்ராஸ் கான் மற்றும் ராகுல்
சர்ஃப்ராஸ் கான் மற்றும் ராகுல்

நிலைத்து விளையாடிய லோகேஸ் ராகுல் 55 ரன்னில் குஜ்ஜெலின் பந்தில் அவுட் ஆகினார். 12 பந்தில் 39 ரன்கள் தேவைபட்ட நிலையில் பஞ்சாப் அணியால் ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது. கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பாப் டுப் ப்ளாஸிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

App download animated image Get the free App now