கோலியை வீழ்த்தி முதலில் சாதனை படைத்த சுரேஷ் ரய்னா 

Pravin
சுரேஷ் ரய்னா
சுரேஷ் ரய்னா

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது தொடரின் முதல் போட்டி நேற்று மிகவும் கோலகலமாக தொடங்கியது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும் மோதின. இந்த போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியின் மீது ரசிகர்களிடையே மிகவும் ஆர்வம் கடந்த ஒரு வார காலமாக அதிகம் காணப்பட்டது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் தற்போதைய இந்திய அணி கேப்டன் கோலி இருவரின் அணிகள் மோதிகொள்வதை காண மிகவும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் முதல் போட்டியிலேயே பல சாதனைகளை படைக்க காத்திருந்தது சென்னை அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இந்த போட்டிக்கு முன்பு சென்னை அணி வீரர் சுரேஷ் ரய்னா 15 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் தொடரில் முதலில் 5000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை அடைய காத்திருந்தார். அதே போல் பெங்களுரு அணியின் கேப்டன் கோலி 5000 ரன்களை அடிக்க 54 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் இந்ந போட்டியில் யார் முதலில் 5000 ரன்களை அடிப்பவர் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் வீராட் கோலி மற்றும் பார்திவ் படேல் இருவரும் களம் இறங்கினர். வீராட் கோலி முதலில் 5000 ரன்களை கடக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் 6 ரன்னில் ஹர்பஜன்சிங் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். இந்த விக்கெடின் மூலம் 5000 ரன்களை கடக்கும் வாய்ப்பினை தவரவிட்டார் வீராட் கோலி. இதை அடுத்து பெங்களுரு அணியில் மோயின் அலி 9 ரன்னிலும், ஏபி டிவில்லியர்ஸ் 9 ரன்னிலும் அவுட் ஆகினர். ஹெட்மஎர் டக் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வெளியேறினர். பெங்களுரு அணியில் பார்திவ் படேல் மட்டும் 29 ரன்களை எடுத்தார். பெங்களுரு அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 70 ரன்களை மட்டும் எடுத்தது.

சுரேஷ் ரய்னா
சுரேஷ் ரய்னா

இதை தொடர்ந்து விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராய்டு இருவரும் களம் இறங்கினர். ஷேன் வாட்சன் டக் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய சுரேஷ் ரய்னா சிறிது நேரம் பெங்களுரு அணியின் பந்து வீச்சில் திணறினார். பின்னர் நிலைத்து விளையாடிய சுரேஷ் ரய்னா 15 ரன்கள் எடுத்த போது ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த சாதனை படைத்தார். ஐபிஎல் தொடரில் முதலில் 5000 ரன்களை கடந்த வீரர் என்ற பெறுமையையும் அடைந்தார். சுரேஷ் ரய்னா 177 போட்டிகள் விளையாடி 5000 ரன்களை அடித்துள்ளார். சுரேஷ் ரய்னா 19 ரன்களில் அவுட் ஆக அதன் பின்னர் ராய்டு 28 ரன்னில் அவுட் ஆகினார். இருப்பினும் சென்னை அணி 17.4 ஓவரில் 71 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now