கே எல் ராகுலின் சோதனைக்காலம் - ஓர் அலசல்

KL Rahul
KL Rahul

இந்திய அணி ஆஸ்த்ரெலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 நவம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய அணி ஆஸ்த்ரெலிய அணியை எதிர்கொள்ள முழுத் திறமையுடன் உள்ளது.ஆஸ்த்ரேலிய அணியில் ஏற்பட்ட சில பிரச்சினை காரணமாக அந்த அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் உள்ளது.முதல்முறையாக ஆஸ்த்ரெலியாவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

ஆனால் இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்சனை உள்ளது.கடந்த சில தொடர்களில் மிடில்டன் ஆர்டர் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமாகச் சொதப்பியுள்ளனர்.அதனால் கே எல் ராகுல் போன்ற சில வீரர்களின் ஆட்டத்திறனை இத்தொடரில் இந்திய அணி நிர்வாகம் கண்காணிக்க வாய்ப்புள்ளது.

கே எல் ராகுல் 2014ல் ஆஸ்திரேலியாவிற்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சிட்னியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். பின்னர் அவர் டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம்பிடித்தார். அவர் அந்த வருடத்தில் 11 போட்டிகளில் 9 அரை சதத்தை விளாசினார். அதில் 7 அரை சதத்தைத் தொடர்ந்து விளாசியுள்ளார்.

ஆனால் அதற்குப் பிறகு இவருக்கு மிகப்பெரிய சோதனைக்காலம் என்றே சொல்லலாம். தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மேற்கிந்திய தீவுகள் அணி தொடரிலும் இச்சோதனை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

இவர் இங்கிலாநதிற்கெதிரான முதல் டி20 போட்டியில் சதத்தை விளாசினார். அனைவரும் இவரது அதிரடி ஆட்டத்தை பார்த்து இந்தத் தொடரில் சிறப்பான வெளிப்படுத்துவார் கே எல் ராகுல் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அடுத்த இரு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் மோசமாக விளையாடினார்.

இவர் டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சில் சிறப்பாகச் செயல்படுவார். இஙகிலாந்திற்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி 149 ரன்களை விளாசினார். ஆனால் அந்த ரன்னை விளாசும்போது இந்திய அணி ஏற்கனவே தொடரை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்தியாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டிகளில் அற்புதமாக விளையாடுவாரென அணைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இந்திய மண்ணில் அவர் ஏமாற்றத்தையளித்தார். 2 டெஸ்ட் போட்டிகளில் 3 இன்னிங்ஸில் விளையாடி 37 ரன்களை மட்டுமே எடுத்தார்.

ராகுல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலும் ஏமாற்றத்தையே அளித்தார். 3 டி20 மில் விளையாடி 57 ரன்களை மட்டுமே அடித்தார்.இதனால் டி20யில் இவருடைய சராசரி 47.2 ஆக மாறியது.

கே எல் ராகுல் தொடர்ச்சியாகத் தனது ஆட்டத்தை வெளிபடுத்தா விட்டாலும் அவ்வப்போது தனது சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி கொண்டுதான் இருந்தார். ஆனால் சர்வதேச அணியில் உள்ள பேட்ஸ்மேன் இவ்வாறு இருப்பது அணியில் அவருடைய இடத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். அவரால் கேப்டன் கோலியின் எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்ய இயலவில்லை.ஆனால் மிகுந்த நம்பிக்கையுடன் அவரைப் போட்டிகளில் களமிறங்குகிறார் கேப்டன் விராட் கோலி.

கேஎல் ராகுல் ஆஸ்த்ரெலிய தொடரில் சீரான ஆட்டத்திறனனுடன் விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவே அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய மற்றும் இறுதி வாய்ப்பு எனவும் சொல்லலாம். எனவே ஆஸ்த்ரெலிய தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆரவாரத்தில் பஞ்சமிருக்காது.

எழுத்து : வாஸ்கர் கௌதம்

மொழிபெயர்ப்பு : சதீஸ்குமார்

Quick Links

App download animated image Get the free App now