இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணிகளுள் ஒன்றாக இருக்கிறது. இந்திய அணி 1983, 2011ஆம் ஆண்டு என இரண்டு முறை உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தை பிடித்தது.
இந்திய அணி தற்போது 2019 உலகக்கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்களது ஆட்டத்தை சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். இந்த பெருமை இந்திய அணியின் கேப்டனான விராட் கோலிக்கு சேரும் ஏனென்றால் அணியை சரியாக வழி நடத்தி வெற்றி பெற வைத்தார். இருந்தாலும் பெரும் பங்கு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவுக்கு உண்டு. இவரின் சிறப்பான பேட்டிங் திறமையால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவர் 144 பந்துகளில் 122 ரன்களை அடித்து அந்த போட்டியின் மேன் ஆப் தி மேட்ச் பட்டம் பெற்றார்.
இவருக்கு பின் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்று அழைக்கப்படும் பும்ரா தனது வேகப்பந்து வீச்சால் தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களை ஆட்டமிழக்க வைத்தார். இதன் பின் யூ.சாஹலும் தனது சிறப்பான பந்துவீச்சு திறமையால் 4 விக்கெட்களை எடுத்து எதிரணியை தடுமாற வைத்தார். இவ்வளவு சிறப்பாக விளையாடிய இந்திய அணியில் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு சிறிதளவு மோசமாக இருந்தது. அணியின் தொடக்கத்தில் பந்துவீசும் இவர் எதிராணியை ரன்கள் அடிக்க விடாமல் தடுக்க வேண்டியது அவசியம். ஆனால் இவர் தனது பத்து ஓவர்களில் 2 விக்கெட்களை பெற்று 44 ரன்களை கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இவர் முதல் உலகக் கோப்பை லீக் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. ஐபிஎல் தொடருக்கு பின்பு கூட இவர் சரியாக விளையாடவில்லை. இருப்பினும் இவரின் அனுபவம் காரணமாகவும் இவரின் மேல் உள்ள நம்பிக்கை காரணமாகவும் உலகக்கோப்பையில் தொடரில் தேர்வு செய்யப்பட்டார்.
இன்று நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியில் தொடக்க வீரரகளான ஃபின்ச் மற்றும் வார்னர் இருவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் கிழித்துப் போடகூடியவர்கள். இதன் காரணமாக தான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பும்ராவை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட் எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். ஆனால் புவனேஷ்வர் குமார் தனது ஓவரில் அதிக ரன்கள் கொடுத்து அவர்களை சிறந்த நிலையில் வர வைத்திடுவார்.
இந்நிலையில் இந்திய அணி புவனேஷ்வர் குமாரின் இடத்திற்கு தற்போது சிறந்த நிலையில் இருக்கும் முகமது ஷமியை கொண்டு வர வேண்டும். முகமது ஷமி கடந்த சில நாட்களாக சிறப்பாக பந்துவீசிக் கொண்டு இருக்கிறார். அதனால் பும்ரா மற்றும் முகமது ஷமி இணைந்து தங்களது தொடக்க ஓவர்களை வீசும்போது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்து விக்கெட் பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியை நாடுவதற்கு அதிக வாய்ப்புகள் அதிகம்.