2019 ஆம் ஆண்டு 12வது உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. 1975, 1979, 1983 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு ஐந்தாவது முறையாக உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைப்பெறுகிறது. இந்த ஆண்டு பத்து அணிகள் மோதுகின்றன.இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை போன்று பத்து ஆண்டு போட்டியிடுகின்றன.
இந்த உலகக் கோப்பை கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 9 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இன்று நடைபெற உள்ள 10வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகிறது. ஆஸ்திரேலியா அணி அனுபவமில்லாத ஆப்கானிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகளால் தோற் கடித்தது.அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணயும் ஏழு விக்கெட்டுகளால் பாகிஸ்தானை தோற்கடித்தது.
இன்று ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதவுள்ளதால் போட்டி விவரங்கள், ஆடும் 11, மற்றும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணி பற்றிய தகவல்களை காண்போம்.
போட்டி விவரங்கள் : ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ்
தேதி : 6, ஜுன் 2019, வியாழக்கிழமை
நேரம் : இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கும்.
எங்கே : நாட்டிங்காம்,ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானம்
லைவ் டெலிஸ்ட் : ஸ்டார் நெட்வொர்க், விஜய் சூபாபர் ( star sports, vijay super )
ஆன்லைன் ஸ்ட்ரீமிங் : ஹாட் ஸ்டார் ( hotstar )
அணி விவரங்கள் :
#1.ஆஸ்திரேலியா
இந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கணக்கை தொடங்கினர்.இந்த போட்டியில் இடது கை பேட்ஸ்மன்களை சமாளிக்க நாதன் லியோன் இடம் பெறுவர் என்று எதிர்பார்க்கபடுகிறது.ஆடம் ஸம்பா அல்லது லியோன் இருவருள் ஒருவர் மட்டுமே இடம்பெறுவார்கள்.ஆடம் ஸம்பா கடந்த ஆட்டத்தில் 3 விக்கெட்களை எடுத்தார். டேவிட் வார்னர் 89 ரன்களை அடித்தார்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள் :
மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மாக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, நாதன் கொல்டர்-நைல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸம்பா, ஷான் மார்ஷ், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரண்டோர்ப், நாதன் லியோன்
முக்கிய வீரர்கள் :
- பேட்டிங் - ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்
- பவுலிங் - மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா
ஆடும் 11 :
டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, நாதன் கொல்டர் நைல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸம்பா / நாதன் லியோன்
#2.வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தனை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.அந்த போட்டியில் கிறிஸ் கெயில் 50 ரன்தளை அடித்தார் அதுவே அணியின் அதிகபட்ச ரன்கனாக இருந்தது. கிறிஸ் கெயில், பிராவோ, ஷிமிரன் ஹெட்மியர் ஆகியோர் டாப் ஆடரில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள். நிக்கோலஸ் பூரன் நடுவரிசையில் அணிக்கு பலம் சேர்க்கும் வீரராக இருக்கிறார். பாகிஸ்தான் எதிரான போட்டியில் ஓஷேன் தாமஸ் கடந்த போட்டியில் 4 விக்கெட்களையும் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்களையும் பெற்றிருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் :
கிறிஸ் கெயில், சாய் ஹோப் , டேரன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மியர், ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் ப்ராத்வாட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ், எவின் லெவிஸ், ஃபேபியன் ஆலன், கெமர் ரோச், ஷானோன் கேப்ரியல்
முக்கிய வீரர்கள் :
- பேட்டிங் - கிறிஸ் கெயில், சாய் ஹோப், சிம்ரான் ஹெட்மியர்
- பவுலிங் - ஓஷேன் தாமஸ்,ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரே ரசல்
ஆடும் 11 :
கிறிஸ் கெயில், ஷை ஹோப், டேரன் பிராவோ, சிம்ரான் ஹெட்மியர், நிக்கோலஸ் பூரன் , ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் ப்ராட்வைட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ்
இன்று வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணி :
இந்த இரு அணிகளும் தனது முதல் லீக் போட்டியில் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.தற்போது இரு அணிகள் நல்ல நிலைமையில் தான் இருக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரசல்,கெயில் என்று மிகப் பெரிய வீரர்கள் இருந்தாலும் பல முறை வெற்றி பலம் வாய்ந்த அணியாக திகழும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற அதிக வாயப்புகள் இருக்கிறது.