2019 ஐ.சி.சி உலகக் கோப்பை தொடர் கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணி வீரர்களும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை படைத்து வருகின்றனர். 45 லீக் போட்டிகளில் இதுவரை 40 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 41 வது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியும் நியூசீலாந்து அணியும் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் மோதவுள்ளனர். இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் பயங்கர வடிவத்தில் உள்ளனர். அதேப் போல் நியூசீலாந்து அணியும் பயங்கர வடிவத்தில் உள்ளனர். இந்த இரு அணிகளும் தற்போது 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றள்ளனர். ஆனால் நியூசீலாந்து அணி 11 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 10 புள்ளிகளைப் பெற்று 4 வது இடத்தில் உள்ளது. தற்போது இன்று நடக்கவுள்ள போட்டி விவரங்கள், அணி விவரம், விளையாடும் 11 வீரர்கள் பற்றியை தகவல்களை காண்போம்.
போட்டி விவரங்கள்
தேதி: செவ்வாய், 3 ஜூலை 2019
நேரம்: 03:00 PM (இந்திய நேரப்படி)
இடம்: ரிவர்சைடு மைதானம், செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்
லீக்: 40வது லீக் போட்டி, ஐசிசி உலகக் கோப்பை 2019
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட்ஸ்டார்
புள்ளிவிவரங்கள்
சராசரி 1 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 246 ரன்கள்
சராசரி 2 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 189 ரன்கள்
அதிகபட்ச மொத்தம் ரன்: 338/6 (50 Ov) SL vs WI
குறைந்த பட்ச மொத்தம் ரன் : 99/10 (26.1 Ov) by ENG vs SLHighest Chased: 314/4 (44.4 Ov) by ENG vs AUS
நேருக்கு நேர் மோதிய எண்ணிக்கை :
இந்த இரு அணிகளும் மொத்தம் 89 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 40 போட்டிகளிலும் நியூசீலாந்து அணி 43 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளனர். இரண்டு போட்டிகள் சமமாக முடிவடைந்துள்ளது. 4 போட்டிகளுக்கு முடிவில்லாமல் இருக்கிறது.
உலகக்கோப்பையில் மோதிய எண்ணிக்கை
இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 8 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் நியூசீலாந்து அணி 5 போட்டியில் இங்கிலாந்து அணி 3 போட்டியில் வெற்றியை பெற்றுள்ளனர்.
அணி விவரங்கள்
இங்கிலாந்து அணி
- ஜேசன் ராய் மீண்டும் தனது இடத்தை துவக்கத்தில் தக்க வைத்துக் கொள்வார்.
- நியூசீலாந்து அணிக்கு எதிராக மோயின் அலி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அப்படி என்றால் மார்க்வுட் பதிலாக களமிறங்குவார் மோயின் அலி
- இங்கிலாந்து அணி 10 புள்ளிகளைப் பெற்று 4 வது இடத்தில் உள்ளது.
நியூசீலாந்து அணி
- நியூசீலாந்து அணியில் எந்தொரு மாற்றமும் இல்லாமல் அதே 11 வீரர்களுடன் விளையாடும்.
- இருப்பினும் மேட் ஹென்றி இடம் பெற வாய்ப்புகள் உள்ளது.
- நியூசீலாந்து அணி 11 புள்ளிகளைப் பெற்று 3 வது இடத்தில் உள்ளது
அணி வீரர்கள்
இங்கிலாந்து அணி வீரர்கள்
இயன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், டாம் குர்ரான், லியாம் டாசன், லியாம் பிளங்கெட், ஆதில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க்வுட்
நியூசீலாந்து அணி
கேன் வில்லியம்சன், டாம் ப்ளண்டெல், ட்ரெண்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குசன், மார்ட்டின் குப்டில், மாட் ஹென்றி, டாம் லாதம், கொலின் முன்ரோ, ஜிம்மி நீஷாம், ஹென்றி நிக்கோல்ஸ், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, ரோஸ் டெய்லர்.
முக்கிய வீரர்கள்
இங்கிலாந்து அணி
பேட்டிங் - ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், ஜோஸ் பட்லர்
பவுலிங் - ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ்
நியூசீலாந்து அணி
பேட்டிங் - கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், மார்டின் குப்தில்
பவுலிங் - ட்ரெண்ட போல்ட், மிட்செல் சாண்ட்னர்.
விளையாடும் 11 வீரர்கள்
இங்கிலாந்து அணி - ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஈயன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் / லியாம் பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத்
நியூசீலாந்து அணி - கொலின் முன்ரோ, மார்ட்டின் குப்தில், கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டாம் லாதம், ஜிம்மி நீஷாம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்டர், லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி / டிம் சவுதி, ட்ரெண்ட் போல்ட்