இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலக கோப்பை தொடரில் 9 முறை விளையாடி உள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 4 முறை, இங்கிலாந்து அணி 4 முறையும் வெற்றி பெற்றது.
12வது உலகக் கோப்பையில் 6வது போட்டி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டி நாட்டிங்காம் நகரில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் பெற்றது. இங்கிலாந்து அணி 349 இலக்குடன் களமிறங்கியது. இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 107 ரன்களை அடித்து இந்தாண்டு உலகக்கோப்பையில் முதல் சதம் அடித்தவரானார். இதன் பின் பட்லர் 103 ரன்களை அடித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 334 ரன்களை அடிக்க முடியாமல் தோல்வி அடைந்தனர். பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடன் வெற்றி பெற்றது.
தற்போது இந்த இரண்டு அணிகளுக்கிடையே உள்ள சில புள்ளி விவரங்களை பார்க்கலாம்.
புள்ளி விவரங்கள் - இங்கிலாந்து, பாகிஸ்தான்
1 - இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் சதம் அடித்த பெருமையை ஜோ ரூட் பெற்றார். இதன் பின் ஜோஸ் பட்லரும் சதம் அடித்தார்.
1 - கடந்த 13 ஓடிஐ தொடரில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற முதல் போட்டியாகும்
4 - கிறிஸ் வோக்ஸ் உலகக் கோப்பை போட்டியில் ஒரு ஃபீல்டர் 4 கேட்ச்களை பிடித்த சாதனையை சமன் செய்தார். 2003 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான 4 கேட்ச்களை முதன் முறையாக முகமது கைஃப் பெற்றார். மற்ற இரண்டு போட்டியாளர்களான சவுமியா சர்க்கர் (ஸ்காட்லாந்துக்கு எதிராக) மற்றும் உமர் அக்மல் (அயர்லாந்துக்கு எதிராக) ஆகியோர் 2015 ஆம் அண்டு 4 கேட்ச்களை பிடித்தனர்.
10 - இயோன் மோர்கன் கடந்த 15 ஓடிஐ தொடரில் 9 அரைசதம் அடித்து மொத்தம் 813 ரன்களை பெற்றுள்ளார்.இந்த உலகக்கோப்பையின் முதல் போட்டியில் அரை சதம் அடித்து 10 தாக உயர்த்தினார்.
10.61 - இங்கிலாந்தில் நடைப்பெற்ற கடந்த 3 ஓடிஐ தொடரில் வஹாப் ரியாஸின் எக்கனாமி ரேட் ஆகும்.
75 - ஜோஸ் பட்லர் இந்த உலகக் கோப்பையில் தனது சதத்தை அடிக்க எடுத்து கொண்ட பந்துகளின் எண்ணிக்கையாகும். இங்கிலாந்து அணி வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரராக பட்லர் இருக்கிறார். இதற்கு முன்னர் கெவின் பீட்டர்சன் 90 பந்துகளில் சதம் அடித்ததே முதலில் இருந்தது.
100 - விக்கெட் கீப்பராக சர்ப்பரஸ் 100 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
130 - பட்லர் மற்றும் ரூட் பாட்னர்சிபில் 130 ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார்கள். இதற்கு முன்னர் ரூட் மற்றும் டெய்லர் இலங்கைக்கு எதிரான போட்டியில் 98 ரன்களை பெற்றனர்.
348 - பாகிஸ்தான் அணியின் இரண்டாவது அதிகபட்ச ரன்னாக இருக்கிறது. 2007 ஆம் அண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக 349 ரன்கள் அடித்து முதல் அதிகபட்ச ரன்னாக இருக்கிறது.
2992 - இன்னும் 8 ரன்களில் ஜாசன் ராய் ஓடிஐ தொடரில் 3000 ரன்களை அடிக்கயுள்ளார்.