கிரிக்கெட் உலகக் கோப்பையை விளையாட்டின் மிகவும் மதிப்புமிக்க நிகழ்வாக அனைவரும் கருதுகின்றனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் தொகுத்து வழங்கும் ஐ.சி.சி உலகக் கோப்பையின் 12 வது பதிப்பில் பந்து வீச்சாளர்கள் தங்களின் திறைமையை வெளிப்படுத்தினர், ஏனென்றால் எல்லா பிட்ச்களும் பேட்டிங் பிட்ச்களாக இருப்பதில்லை. மழை மற்றும் மேகமூட்டமான சூழ்நிலைகள் நிலவும் சில போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
உலகக் கோப்பை போட்டியின் முடிவில் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் யார் முதலிடம் வகிக்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள சுவாரஸ்யமாக இருக்கும். முகமது அமீர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் 3 நட்சத்திர பந்து வீச்சாளர்கள், தற்போது தலா 15 விக்கெட்டுகளுடன் தரவரிசையில் முன்னிலை வகிக்கின்றனர். யுஸ்வேந்திர சாஹல் மற்றும் இம்ரான் தாஹிர் போன்ற சில சுழற்பந்து வீச்சாளர்களும் பந்தயத்தில் உள்ளனர். எனவே தற்போது மூன்று சிறந்த பந்துவீச்சாளர்கள் பற்றி காண்போம்.
மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)

போட்டிகள் - 6, விக்கெட் - 15
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், போட்டியின் முடிவில் இந்த விருதை வெல்ல முன்னணியில் உள்ளார். அவர் தனது மின்னல் வேகம் மற்றும் பவுன்ஸ் மூலம் உலகின் வலிமையான பேட்ஸ்மேன்களை அடக்க முடியும், மேலும் அவர் விருப்பப்படி ஜோடியை உடைக்க முடியும். வெறும் 6 போட்டிகளில், ஸ்டார்க் ஏற்கனவே 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அரையிறுதிக்கு முன்னேற அவரது அணி முன்னனியில் இருப்பதால், அவர் பட்டியலில் முதலிடம் பெறுவதற்கான ஒரு பிரமாண்டமான வாய்ப்பு உள்ளது.
யுஸ்வேந்திர சாஹல் (இந்தியா)

போட்டிகள் - 4, விக்கெட் - 8
இந்த உலகக் கோப்பையில் மணிகட்டு ஸ்பின்னர்கள் விளையாட்டை மாற்றியவர் என்பதை நிரூபிக்க முடியும். யுஸ்வேந்திர சாஹல் பிரதான மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளராக இருப்பதால் இந்தியா இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். யுஸ்வேந்திர சாஹல் இதுவரை 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், மேலும் அவர் பந்தை கையில் வைத்திருக்கும் போதெல்லாம் அச்சுறுத்தலாக இருக்கிறார். அவர் தனது இங்கிலாந்து அனுபவத்தை நன்கு பயன்படுத்திக் கொள்வார் என்றும், இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவார் என்றும் எதிர்பார்க்கலாம்.
முகமது அமீர் (பாகிஸ்தான்)

போட்டிகள் - 5, விக்கெட் - 15
பாக்கிஸ்தான் இந்த ஆண்டு உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் அவர்களின் நட்சத்திர பந்து வீச்சாளரான முகமது அமீர் மிகச்சிறந்த ஆட்டக்காரராக இருந்து வருகிறார். பாகிஸ்தான் பந்துவீச்சு வரிசையில் வெறும் 5 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் முகமது அமீர். அவர் கிட்டத்தட்ட அனைத்து பேட்ஸ்மேன்களையும் தனது வேகம் மற்றும் ஸ்விங் மூலம் தொந்தரவு செய்து அவர்களின் விக்கெட்களை பெறுவார். இவர் இன்னும் பல விக்கெட்களை பெற்று சாதனை படைப்பார் என்று நம்பலாம்.
