#3 கேதார் ஜாதவிற்கு போதுமான பேட்டிங்கையும், விஜய் சங்கருக்கு போதுமான பௌலிங்கையும் அளிக்கப்பட வேண்டும்
கேதார் ஜாதவ் ஒரு சிறந்த அனுபவ பேட்ஸ்மேன். ஆனால் ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் தோல்பட்டையில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். கேதார் ஜாதவ் நம்பர்-6 பேட்ஸ்மேனாக இந்திய அணியில் களமிறங்குவார்.
நெருக்கடியான சமயங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர். எனவே உலகக் கோப்பையில் இவரது ஆட்டத்திறன் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது ஆகும். ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்திறன் மற்றும் தோல்பட்டை காயம் ஆகியவற்றிலிருந்து மீண்டு வெளிவந்த கேதார் ஜாதவ் அதிக பயிற்சியை மிடில் ஆர்டரில் மேற்கொள்ள வேண்டும். சரியான பேட்டிங் மனநிலையை உறுதிபடுத்த வேண்டும்.
விஜய் சங்கரை பாரக்கும் போது சர்வதேச கிரிக்கெட்டில் பௌலிங்கில் அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஓடிஐ/டி20 கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் விராட் கோலி, ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு பௌலிங் வாய்ப்பு வழங்கவில்லை.
பௌலிங் என்பது ஒரு அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டு விட்டாலோ அல்லது மோசமான பௌலிங்கை வெளிபடுத்தினாலோ, அந்த கட்டத்தில் விஜய் சங்கரின் பௌலிங் கைகொடுக்கும். பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கருக்கு பௌலிங் வாய்ப்பு வழங்கப்பட்டு அவரது ஆட்டத்திறனை மேம்படுத்தி வைக்க வேண்டும். எனவே உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற உள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விஜய் சங்கருக்கு அதிக பௌலிங் வாய்ப்பை வழங்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாகும்.