இம்முறை நடைபெறப்போகும் உலக கோப்பை தொடரை வெல்ல போகும் அணிகளில், ஒன்றாக இந்திய அணி கருதப்படுகிறது. ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் சாதனைகள் அபாரமாக உள்ளது. இரு முறை சாம்பியனான இந்திய அணிக்கு பக்கபலமாய் ரசிகர்கள் உள்ளனர். இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடரில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டுமென ரசிகர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டு இருக்கின்றனர். ஒருவேளை இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றால், ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக மூன்று முறை உலகக் கோப்பை தொடரை வென்ற அணி என்ற சாதனையைப் படைக்கும்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை சந்திக்க உள்ளது. ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் முடிந்த இந்திய ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றிருந்தது. எனவே, இதற்குப் பழி தீர்க்கும் தீர்க்கும் விதமாக இந்திய அணியின் செயல்பாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த உலகக் கோப்பை தொடரிl இறுதிப்போட்டி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு பெரும் சவாலாக விளங்கும் என தெரிகிறது. தனது நான்காவது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது, இந்திய அணி.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனவே, அதற்கு ஈடுகட்ட இம்முறை தக்க பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்க உள்ளது, இந்திய அணி. இந்த உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலமற்ற அணிகளாக உள்ளன. இருப்பினும், எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல் தனது இயல்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் இந்திய அணிக்கு சற்று சவால் அளிக்கும் விதமாக இருக்கும். எனவே உலக கோப்பை தொடரில், இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டவணையின் தொடக்கத்திலிருந்து எந்த நெருக்கடியும் இல்லாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அரையிறுதிக்கு சுலபமாக முன்னேறிவிடலாம். 2019 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கால அட்டவணை,
ஜூன் 5 (இந்திய நேரப்படி மதியம் 3 மணி) - இந்தியா Vs தென்னாப்பிரிக்கா - சவுத்தாம்டன்
ஜூன் 9 (இந்திய நேரப்படி மதியம் 3 மணி) - இந்தியா Vs ஆஸ்திரேலியா - லண்டன்
ஜூன் 13 (இந்திய நேரப்படி மதியம் 3 மணி) - இந்தியா Vs நியூசிலாந்து - நாட்டின்கம்
ஜூன் 16 (இந்திய நேரப்படி மதியம் 3 மணி) - இந்தியா Vs பாக்கிஸ்தான் - மான்செஸ்டர்
ஜூன் 22 (இந்திய நேரப்படி மதியம் 3 மணி) - இந்தியா Vs ஆப்கானிஸ்தான் - சவுத்தாம்டன்
ஜூன் 27 (இந்திய நேரப்படி மதியம் 3 மணி) - இந்தியா Vs வெஸ்ட் இன்டீஸ் - மான்செஸ்டர்
ஜூன் 30 (இந்திய நேரப்படி மதியம் 3 மணி) - இந்தியா Vs இங்கிலாந்து - பர்மிங்காம்
ஜூலை 2 (இந்திய நேரப்படி மதியம் 3 மணி) - இந்தியா Vs வங்கதேசம் - பர்மிங்காம்
ஜூலை 6 (இந்திய நேரப்படி மதியம் 3 மணி) - இந்தியா Vs இலங்கை -லீட்ஸ்
2019 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி:
விராத் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக்.