கிரிக்கெட்டில் சதம் விளாசினால் ஒரு பெரிய சாதனையாக இருக்கும், ஆனால் இரட்டை சதம் விளாசினால் அதைவிட மிகப்பெரிய சாதனை. ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசுவது என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இரட்டை சதத்தினை காண உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் 39 வருடங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டியதாக இருந்தது.
2010ல் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் கிரிக்கெட் வரலாற்றில் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் முதன்முதலாக இரட்டை சதம் விளாசினார். அதன்பின் 5ற்கும் மேற்பட்ட வீரர்கள் இரட்டை சதத்தினை விளாசியுள்ளார். இதில் ரோகித் சர்மா மட்டும் 3 இரட்டை சதத்தினை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசுவது என்பது ஒரு மிகப்பெரிய சாதனையாகவே உள்ளது. இதனை ஒரு சாதாரண சாதனையாக இதுவரை யாரும் பார்த்ததில்லை. கிரிக்கெட் உலகில் இரட்டை சதம் விளாச திறமை இருந்தும் சிலரால் அந்த சாதனையை அடையமுடியவில்லை. இவர்கள் 2019 உலகக் கோப்பை தொடரில் சதம் விளாசினால் கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை. நாம் இங்கு எதிர்வரும் ஐசிசி-யின் மிக பிரம்மாண்டமான உலகக் கோப்பை திருவிழாவில் தனது முதல் இரட்டை சதத்தினை விளாச வாய்ப்புள்ள 4 வீரர்களை பற்றி காண்போம்.
#1 டேவிட் வார்னர்
உலகின் மிகவும் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய பேட்டிங் சூப்பர் ஸ்டார் டேவிட் வார்னர் எதிரணிக்கு தனது சிறப்பான பேட்டிங் மூலம் நெருக்கடியை அளிப்பதில் வல்லவர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர். டேவிட் வார்னர் மட்டும் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை நின்று விளையாடினால் கண்டிப்பாக இரட்டை சதம் விளாச வாய்ப்புண்டு.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 14 சதங்களை விளாசியுள்ளார். ஒரு போட்டியில் அதிகபட்சமாக 179 ரன்களை குவித்துள்ளார். இடதுகை பேட்ஸ்மேனான இவர் 2019 இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது முழு ஆட்டத்திறனை வெளிக்கொண்டு வந்தார். இதே ஆட்டத்திறனை உலகக் கோப்பை தொடரிலும் வெளிபடுத்தினால் கண்டிப்பாக தனது முதல் இரட்டை சதத்தினை விளாசுவார் என்பதில் சந்தேகமில்லை.
முன்னாள் உலக கோப்பை சேம்பியன் ஆஸ்திரேலிய அணியில் சிறப்பான பேட்டிங் லைன்-அப் உள்ளது. அந்த அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இடம்பெற்றிருப்பது ஆஸ்திரேலிய அணியின் கூடுதல் பலமாகும். கண்டிப்பாக இடதுகை பேட்ஸ்மேன் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு தனது சிறப்பான பேட்டிங்கில் பெரிதும் உதவியாக இருப்பார்.
#2 ஜானி பேர்ஸ்டோவ்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக ஓடிஐ கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்கிறது. பெரும்பாலும் இங்கிலாந்து அணியின் வலிமையான பேட்டிங்கே அந்த அணி வலிமையாக திகழ முக்கிய காரணமாக இருந்துள்ளது. அதிக மாற்றங்களை தங்கள் அணியில் நிகழ்த்தி சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பலம் வாய்ந்த அணியாக இங்கிலாந்து வலம் வந்து கொண்டு உள்ளது.
ஜானி பேர்ஸ்டோவ் இங்கிலாந்து அணிக்கு ஒரு தடுப்புசுவராக நின்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி பொறுப்பான ஆட்டத்தை அனைத்து விதமான மைதானங்களிலும் விளையாடி வருகிறார் ஜானி பேர்ஸ்டோவ். வலதுகை பேட்ஸ்மேனான இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 107 ஸ்ட்ரைக் ரேட்டுடன் உலக கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார்.
கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிக முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதங்களை விளாசியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை கையாண்டு பெரிய இன்னிங்ஸை விளையாடும் திறமை ஜானி பேர்ஸ்டோவிற்கு உண்டு. ஷாட் தேர்வை சரியாக தேர்ந்தெடுத்து ஜானி பேர்ஸ்டோவ் விளையாட ஆரம்பித்தால் கண்டிப்பாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சதம் விளாசுவார்.
#3 விராட் கோலி
உலக கிரிக்கெட்டில் விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக தனித்திறமையுடன் திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக விராட் கோலி வலம் வருகிறார். இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 41 சதங்களை விளாசியுள்ளார். அத்துடன் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய இன்னிங்ஸை விளையாடும் திறமை கொண்டவர்.
வலது கை பேட்ஸ்மேன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்தும், முறியடித்தும் உள்ளார். ஆனால் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தினை மட்டும் விராட் கோலி விளாசியது இல்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி-யின் அதிகபட்ச ரன்கள் 183 ஆகும். தற்போது இரட்டை சதம் என்பது ஒரு சிறந்த பேட்ஸ்மேனுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது.
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 60 சராசரியுடனும் உள்ளார். விராட் கோலி-க்கு சற்று முன்னதாக பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இரட்டை சதத்தினை விளாசுவார். டெத் ஓவரில் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தும் திறமை விராட் கோலிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
#4 காலின் முன்ரோ
உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களுள் காலின் முன்ரோ-வும் ஒருவர். ஆச்சரியமளிக்கும் விதமாக சர்வதேச டி20யில் காலின் முன்ரோ 3 சதங்களை விளாசியுள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட விளாசியது இல்லை. இவரது அதிரடி பேட்டிங் எதிரணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஷாட்களை சரியான விதத்தில் தேர்வு செய்து அதிரடியாக விளையாடும் திறமை கொண்டவர் காலின் முன்ரோ.
நியூசிலாந்தின் பவர் ஹிட்டர் காலின் முன்ரோ பெரிய சிக்ஸர்களை விளாசுவார். நிதானமான ஆட்டத்தினை காலின் முன்ரோ கையாண்டால் கண்டிப்பாக ஒரு சிறப்பான கிரிக்கெட் வீரராக திகழ அதிக வாய்ப்புள்ளது. இடதுகை பேட்ஸ்மேன் காலின் முன்ரோ 107 ஸ்ட்ரைக் ரேட்டை ஒருநாள் கிரிக்கெட்டில் வைத்துள்ளார். ஆனால் சராசரி மிகவும் குறைவாக உள்ளது.
காலின் முன்ரோ ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் தன்னை சிறந்த பேட்ஸ்மேனாக நிருபித்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை அளிப்பார். அத்துடன் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முன்ரோ இரட்டை சதம் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.