#3 விராட் கோலி
உலக கிரிக்கெட்டில் விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக தனித்திறமையுடன் திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக விராட் கோலி வலம் வருகிறார். இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 41 சதங்களை விளாசியுள்ளார். அத்துடன் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய இன்னிங்ஸை விளையாடும் திறமை கொண்டவர்.
வலது கை பேட்ஸ்மேன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்தும், முறியடித்தும் உள்ளார். ஆனால் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தினை மட்டும் விராட் கோலி விளாசியது இல்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி-யின் அதிகபட்ச ரன்கள் 183 ஆகும். தற்போது இரட்டை சதம் என்பது ஒரு சிறந்த பேட்ஸ்மேனுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது.
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 60 சராசரியுடனும் உள்ளார். விராட் கோலி-க்கு சற்று முன்னதாக பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இரட்டை சதத்தினை விளாசுவார். டெத் ஓவரில் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தும் திறமை விராட் கோலிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
#4 காலின் முன்ரோ
உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களுள் காலின் முன்ரோ-வும் ஒருவர். ஆச்சரியமளிக்கும் விதமாக சர்வதேச டி20யில் காலின் முன்ரோ 3 சதங்களை விளாசியுள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட விளாசியது இல்லை. இவரது அதிரடி பேட்டிங் எதிரணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஷாட்களை சரியான விதத்தில் தேர்வு செய்து அதிரடியாக விளையாடும் திறமை கொண்டவர் காலின் முன்ரோ.
நியூசிலாந்தின் பவர் ஹிட்டர் காலின் முன்ரோ பெரிய சிக்ஸர்களை விளாசுவார். நிதானமான ஆட்டத்தினை காலின் முன்ரோ கையாண்டால் கண்டிப்பாக ஒரு சிறப்பான கிரிக்கெட் வீரராக திகழ அதிக வாய்ப்புள்ளது. இடதுகை பேட்ஸ்மேன் காலின் முன்ரோ 107 ஸ்ட்ரைக் ரேட்டை ஒருநாள் கிரிக்கெட்டில் வைத்துள்ளார். ஆனால் சராசரி மிகவும் குறைவாக உள்ளது.
காலின் முன்ரோ ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் தன்னை சிறந்த பேட்ஸ்மேனாக நிருபித்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை அளிப்பார். அத்துடன் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முன்ரோ இரட்டை சதம் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.