மே மாதம் 30ம் தேதி முதல் தொடங்க உள்ள உலக 2019 கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்கும் கள நடுவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தப் பட்டியலில் 22 அலுவலகப் பணியாளர்கள், 16 நடுவர்கள் மற்றும் ஆறு ரெஃபிரிக்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கடந்த 23ம் தேதி வரை உலக கோப்பையில் பங்கேற்கும் 10 நாடுகளின் அணியினரை தெரிவிக்க வேண்டுமென ஐசிசி ஐசிசி கூறியிருந்தது. ஐசிசி கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெறும் ஒவ்வொரு நாடுகளிலும் கள நடுவர்களின் பங்கு இன்றியமையாதது. ஏனெனில், ஆட்டத்தை சரியான போக்குடன் நடத்தும் தன்மை, ஆட்டத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கியமான முடிவுகளை கையாளும் பொறுப்பு ஆகியவை நடுவர்களின் போக்கை பொருத்துதான் அமையும்.
ஆட்டத்தில் ஒரு சில நேரங்களில் சரியான முடிவை நடுவர் எடுக்க தவறினால் ஸ்னிக்கோ மீட்டர், ஹாட்ஸ்பாட், பால் டிராக்கர் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் கையாளப்படும். இவற்றைக் கொண்டு சரியான முடிவை எடுக்க நேரிடும்.
உலக கோப்பை தொடரின் நடைபெற உள்ள 48 ஆட்டங்களுக்கு 16 கள நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்தகால போட்டிகளில் சிறப்பாக மற்றும் சரியான முடிவுகளை கூறியதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
"உலககோப்பை தொடரை நடத்துவதில் ஐசிசி பெருமை கொள்கிறது. போட்டியின் ஒவ்வொரு முடிவுகளும் சற்று கடினமானது தான். நாங்கள் அறிவித்துள்ள 22 பேரும் உலகின் மிகச்சிறந்த முடிவுகளை அளித்துள்ளனர். அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்" என அம்பயர்கள் மற்றும் ரெஃப்ரிக்களைப் பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சீனியர் மேனேஜரான அட்டிரியாயன் கிரிஃபித் கூறியுள்ளார்.
2019 உலக கோப்பை தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவிருக்கின்றன. இந்த போட்டியை உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற 3 வீரர்களான ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன், இலங்கையின் குமார் தர்மசேனா மற்றும் பால் ரெய்ஃபில் ஆகியோர் ரெப்ரி மற்றும் அம்பயர் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இவர்கள் அனைவரும் முறையே 1987, 1996 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பை தொடரை வென்ற அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஆவர்.
இந்த உலகக்கோப்பை தொடரில் மிகவும் அனுபவமான ரெப்ரி என்ற பெருமையை பெறுகிறார், ரஞ்சன் மதுகளே. இவர் 6 முறை உலகக் கோப்பை தொடர்களில் ரெஃப்ரியாக செயல்பட்டுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் பிராட் மற்றும் ஜெஃப் க்ரோவ் ஆகியோர் தலா நான்காவது முறையாக உலக கோப்பை தொடரில் ரெஃப்ரியாக்களாக இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த அலிம் தர் ஐந்தாவது முறையாக உலக கோப்பை தொடரின் அம்பெயர் பணியை மேற்கொள்ள உள்ளார். இந்த உலகக் கோப்பை தொடருக்கு பின்னர், இயான் கோல்ட் அம்பெயர் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இவர் இதுவரை 70 நாள் டெஸ்ட் போட்டிகள் , 135 ஒருநாள் போட்டிகள் மற்றும் மற்றும் 37 டி20 போட்டிகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் ரெஃப்ரிக்கள்:
கிறிஸ் பிராட், டேவிட் பூண், ஆண்டி பைக்ராஃப்ட், ஜெஃப் க்ரோவ், ரஞ்சன் மதுகளே மற்றும் ரிச்சி ரிச்சர்ட்சன்.
உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அம்பயர்கள்:
அலிம் தர், குமார் தர்மசேனா, மராஸ் எராஸ்மஸ், கிறிஸ் கஃப்னே,இயான் கோல்ட்,ரிச்சர்ட் இல்லிங்க்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பெர்க், நிகெல் லாங்க், ப்ரூஸ் ஆக்ஸ்சன்போர்ட், சுந்தரம் ரவி, பால் ரெய்ஃப்ஃபில், ராட் டக்கர், ஜோல் வில்சன், மைக்கெல் காக், ருச்சிரா பாலியாகுருக், பால் வில்சன்.