நடந்தது என்ன?
இந்திய அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த காயத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ செய்தி இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இன்னும் வெளியிடப்படவில்லை.
உங்களுக்கு தெரியுமா...
உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி மே 25 அன்று நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளது. அடுத்ததாக 2வது பயிற்சி ஆட்டத்தில் மே 27 அன்று வங்கதேச அணியை எதிர்கொள்ள இருக்கிறது
கதைக்கரு
இந்திய உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த கேதார் ஜாதவ் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் இந்திய மருத்துவ நிபுணர் பேட்ரிக் ஃபேர்ஹார்ட் நடத்திய உடற்தகுதி தேர்வில் கேதார் ஜாதவ் தேர்ச்சி அடைந்தார். உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இவர் இடம்பெறுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. "கிரிக்இன்போ" இணைய தளத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, விஜய் சங்கர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது பந்து முழங்கையில் பட்டதால் அவர் உடனே ஓய்வறைக்கு சென்று விட்டதாக கூறப்பட்டுள்ளது.
28 வயதான இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் வலைபயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, வலைப்பயிற்சியில் பந்துவீசுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள 4 வேகப்பந்து வீச்சாளர்களுள் ஒருவரான கலீல் அகமது "புல் ஷாட்" அடிக்க முயற்சித்தார். ஆனால் வலதுகை பேட்ஸ்மேன் விஜய் சங்கர் அந்த பந்தை தவறவிட்டார். அதனால் அந்த பந்து நேரடியாக விஜய் சங்கரின் முழங்கையை தாக்கி வலியை ஏற்படுத்தியது.
இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் உடனே பேட்டை தனது இடதுகையில் பிடித்துக் கொண்டு, மிகவும் அதிக வலியை உணர்ந்தார். அவரது உடற்தகுதியில் சற்று சந்தேகம் ஏற்பட்டதால் அணி நிர்வாகம் அவரை அதற்கு மேல் வலைப்பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. கேதார் ஜாதவ் ஏற்கனவே பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகத்தில் உள்ள நிலையில், தற்போது விஜய் சங்கரும் அந்த நிலையில் இருப்பதால் இந்திய அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய உடற்தகுதி நிபுணர் கண்காணிப்பில் கேதார் ஜாதவ் வியாழன் & வெள்ளி அன்று பயிற்சி மேற்கொண்டார். அத்துடன் இவர் வலைப்பயிற்சியிலும் பங்கேற்றார், ஆனால் முதன்மை வலைப்பயிற்சியில் இல்லை. இதனைப் பார்க்கும்போது நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கேதார் ஜாதவ் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.
விஜய் சங்கர் & கேதார் ஜாதவ் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளதால் மிடில் ஆர்டரில் தன்னை நிருபிக்க கே.எல்.ராகுலுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கே.எல்.ராகுல் மாற்று தொடக்க ஆட்டக்காரராக உலகக் கோப்பை இந்திய அணியில் அணியில் இடம்பெற்றிருந்தாலும், மிடில் ஆர்டரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர்.
அடுத்தது என்ன?
இந்திய அணி மே 5 அன்று தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்க உள்ளது. இதற்கு முன்பாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக இரு பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.