இந்த உலக கோப்பை தொடரில் முறியடிக்க உள்ள மூன்று பேட்டிங் சாதனைகள் 

Martin Guptill scored most runs in 2015 World Cup
Martin Guptill scored most runs in 2015 World Cup

2019 உலகக்கோப்பை திருவிழா வருகிற 30ம் தேதி ஓவல் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த பெருமைமிக்க தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன. இங்கிலாந்து மண்ணில் ஆடுகளங்கள் பெரும்பாலும் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் வல்லுனர்களின் கூற்றாகும். இதனை நாம் நடந்து முடிந்த பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் தொடர்களிலேயே கண்டோம். எனவே, பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக திகழும் இங்கிலாந்து மைதானங்களில் இம்முறை பல சாதனைகள் முறியடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அவ்வாறான முறியடிக்கப்படுவதற்கான சாதனைகளில் முக்கியமான மூன்றை பற்றி இந்த தொகுப்பு. எடுத்துரைக்கின்றது.

#1.உலக கோப்பை தொடர்களில் அதிகபட்ச சதங்கள்:

Can Rohit Sharma hit a double century in World Cup?
Can Rohit Sharma hit a double century in World Cup?

2015 உலக கோப்பை தொடரில் நடைபெற்ற 48 ஆட்டங்களில் 38 சதங்கள் அடிக்கப்பட்டன. சராசரியாக ஒரு ஆட்டத்தில் 0.79 சதம் அடிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணியின் ஒருநாள் தொடரில் நடைபெற்ற 14 போட்டிகளில் 13 சதங்கள் குவிக்கப்பட்டன. இந்த உலக கோப்பை தொடரில் அடங்கிய 48 ஆட்டங்களில் சராசரியாக 41 சதங்கள் அடிக்கப்படும் என கணிக்கப்படுகிறது. மேலும், அனைத்து அணியினரும் ஒரே சுற்றில் உள்ளதால் ஒவ்வொரு அணியும் 9 போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதனால் அதிக சதங்கள் அடிக்கப் படுவதற்கான வாய்ப்புகளில் இதுவும் ஒன்று.

#2.உலக கோப்பை தொடரில் அதிக அரைசதங்கள்:

2019 உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடிக்கப்படும் என்ற கணிப்பை போல அதிக அரை சதங்களும் அடிப்பதற்கான வாய்ப்புளும் உள்ளது. ஏனெனில், கடந்த 2015 உலகக் கோப்பை தொடரில் 149 அரைசதங்கள் குவிக்கப்பட்டன. சராசரியாக, ஒரு போட்டிக்கு 3.10 என்ற அளவிற்கு அரைசதங்கள் அடிக்கப்பட்டன. சமீபத்தில் இங்கிலாந்து விளையாடிய தொடர்களில் கூட 43 அரைசதங்கள் குவிக்கப்பட்டன. எனவே, இங்கிலாந்து மைதானங்களில் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக இருப்பதால் 48 உலகக்கோப்பை போட்டிகளில் 154 குவிக்கப்படும் என கணிக்கப்படுகிறது.

#3.உலக கோப்பை தொடரில் ஒரே போட்டியில் அதிகபட்ச ஸ்கோர்

South Africa scored 400+ totals twice in 2015 World Cup
South Africa scored 400+ totals twice in 2015 World Cup

:உலக கோப்பை தொடரில் ஒரே போட்டியில் அதிக ரன்களை குவித்த அணி என்ற பெருமையை தென் ஆப்ரிக்கா கொண்டுள்ளது. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் தென் ஆப்ரிக்கா அணி குவித்து இத்தகைய சாதனையை புரிந்தது. சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து தொடர்களில் கூட பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் சராசரியாக ஒவ்வொரு போட்டிகளிலும் 340 ரன்கள் இங்கிலாந்து அணி வெற்றிகரமாக சேஸிங் செய்து சாதனை படைத்தது. இதன்படி பார்த்தால், இந்த உலகக் கோப்பைத் தொடரில் சர்வசாதாரணமாக 400 ரன்களை கூட ஒரே இன்னிங்சில் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் தென் ஆப்ரிக்கா அணியின் சாதனை முறியடிக்க படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Quick Links

App download animated image Get the free App now