இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தற்போதைய உலக கோப்பையில் நடைமுறைப்படுத்த போகும் அனுகுமுறையை விரும்பவில்லை. மேலும், இதற்கு மாற்றாக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பின்பற்றிவரும் ப்ளே ஆப் சுற்றுகளை போல உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்று அமைய வேண்டும் என்று கூறியிருக்கிறார். 2019 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து நாட்டிற்கு புறப்படும் முன்னர், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் சாஸ்திரி ஆகியோர் மும்பையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளிக்கும் போது இதுபோன்ற கூற்றை ரவி சாஸ்திரி வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது நடைபெற உள்ள உலக கோப்பை தொடரின் விதிகள் படி, புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் அணி, அரையிறுதிப் போட்டியில் புள்ளி பட்டியலில் கடைசி இடம் வகிக்கும் அணியுடன் மோத வேண்டும் என்ற விதி உள்ளது. மேலும், புள்ளி பட்டியலில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் வகிக்கும் அணிகள் ஒருவருக்கொருவர் அரையிறுதிப் போட்டியில் மோதிக் கொள்ள வேண்டும். ஆனால், இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இது போன்ற விதிகள் பின்பற்றப்படாமல், புள்ளி பட்டியலில் இரு தகுதி சுற்றுகள், ஒரு வெளியேற்றுதல் சுற்று மற்றும் இறுதி போட்டி ஆகியவை இந்த பிளே ஆப் சுற்றில் அடங்கியுள்ளன. உலக கோப்பை தொடரில் ஐபிஎல் போட்டிகளை போல விதிகளை மாற்றி அமைத்தால் சற்று ஏற்றவாறு இருக்கும் என்று சாஸ்திரி தமது வெளிப்பாட்டை கூறியுள்ளார்.
"தாம் எப்போதும் சொல்வதைப்போல இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் விதிகள் அருமையாக உள்ளன. உங்களுக்கு தெரியாது வருங்காலத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதுபோன்ற மாற்றங்களை கொண்டுவரலாம். இந்த உலக கோப்பை தொடர் எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். எங்களது அணி கடந்த ஐந்து ஆண்டு காலமாக பலதரப்பட்ட போட்டிகளில் விளையாடி சிறப்பாக வெற்றிகளை குவித்துள்ளது. அதே போன்று உலக கோப்பை தொடரிலும் நாங்கள் வெற்றி பெற விரும்புகிறோம். இதை வெறும் ஒரு சுற்றாக மற்றும் கருதி எங்களது முழு திறனையும் உலக கோப்பை தொடரில் நிரூபிப்போம். இந்த விதிகள் சற்று எங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் உள்ளன. இந்த உலகக்கோப்பை தொடரில் மிகவும் சவால் அளிக்கக்கூடிய பலமான தொடராக எங்களுக்கு அமையும். இதுபோன்று அமைவதும் நன்றாகத்தான் உள்ளது. இதுபோன்ற விதிகளில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மை என்னவென்றால், முதல் சுற்றிலேயே நாங்கள் 9 எதிரணியுடன் விளையாட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது" என்று கூறியுள்ளார்.
1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் ரவிசாஸ்திரி இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 உலகக் கோப்பை தொடர் வரும் 30ம் தேதி முதல் துவங்க உள்ளது.. இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை ஜூன் மாதம் ஐந்தாம் தேதி எதிர்கொள்ள உள்ளது. இதற்கு முன்னர், நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாட உள்ளது.