அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு நாடுகளும் தங்களது அணியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்ததோடு அதற்குண்டான பயிற்சியையும் தொடங்கிவிட்டனர். இந்தியாவும் சில நாட்களுக்கு முன்னர் 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களும், அதுமட்டுமின்றி ஹர்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கர் போன்ற இளம் வீரர்களும் இடம்பெற்றனர். மேலும், அணியில் உலககோப்பையில் முன் அனுபவம் இல்லாத கே.எல்.ராகுல், விஜய் சங்கர் போன்ற போட்டியாளர்களும், ஏற்கனவே மூன்று நான்கு உலகக்கோப்பை விளையாடி அனுபவம் வாய்ந்த போட்டியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய போது தான், கடைசியாக உலகக் கோப்பையை இந்தியா வென்றது. மேலும், அவர் 6 உலக கோப்பை தொடர்களில் விளையாடி, அவற்றில் 5 தொடர்களில் தோற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . உலகக் கோப்பையின் 2015ஆம் ஆண்டு இந்தியா விளையாடிய போது, உலகக் கோப்பையில் வெல்லவில்லை என்றாலும், இந்த ஆண்டின் உலகக்கோப்பை ரசிகர்களுக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒன்றாகும்.ஏனெனில், கிரிக்கெட் வரலாற்றின் ஜாம்பவான்களின் தலைவனாக விளங்கும் மகேந்திரசிங் தோனி தன்னுடைய கடைசி உலகக் கோப்பையை விளையாட உள்ளார்.
அவருடன் சேர்ந்து தங்களுடைய கடைசி உலகக் கோப்பையை விளையாட உள்ள மூன்று வீரர்களைப் பற்றி காண்போம் .
#1. ஷிகர் தவான்:
2013 மற்றும் 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரரான, ஷிகார் தவான் 2015 உலகக் கோப்பையில் இந்தியாவின் அடிக ரன்களை குவித்த வீரர் ஆவார். இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராகவும் உள்ள இவர் ,இந்த உலகக் கோப்பையிலும் அதிக ரன்கள் எடுப்போர் பட்டியலில் இடம் பெறுவார் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
அதுமட்டுமின்றி, இந்த தொடர் ஷிகர் தவானின் கடைசி உலகக் கோப்பையாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ,அவருக்கு தற்போதைய வயது 33லிருந்து 34 ஆக உள்ளது. அடுத்த உலக கோப்பை 2023-றின் போது இவருடைய வயது 37 ஆக உயரும். திறமை கைகொடுத்தாலும் உடல் ஒத்துழைக்காது என்பதே நிதர்சனம். இளம் வீரர்களான சுமன் கில், ப்ரீத்வி ஷா போன்றோர் நல்ல பேட்டிங் திறனை வெளிப்படுத்துவதன் மூலம் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. எனவே, அடுத்த உலக கோப்பையின்போது தவானுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே.
#2. கேதர் ஜாதவ்:
இந்தியாவிற்காக மிடில் ஆர்டரில் இறங்கி விளையாடக்கூடிய வீரர்களுள் ஒருவர், கேதர் ஜாதவ். இவர் இதுவரை இந்தியாவின் வெற்றிக்காக பல்வேறு போட்டிகளில் நிறைய ரன்களை விளாசியுள்ளார். எடுத்துக்காட்டாக, சர்வதேச 50 ஓவர் போட்டி ஒன்றில், 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்த நிலையில் இவர் விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப்பில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இவர் இந்த ஆண்டு உலக கோப்பையிலும் நிறைய ரன்கள் எடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை என்றே கூறலாம்.
இவரின் தற்போதைய வயது 34 ஆக உள்ளது. 2023 உலக கோப்பையின் போது இவருடைய வயது 38 ஆக உயரும். அப்பொழுது தற்போதைய பார்மை தக்க வைத்துக் கொள்வது என்பது நடக்க இயலாத காரியமாகும். நிறைய இளம் வீரர்களை எதிர்பார்க்கும் இந்திய அணி இவரை ஏற்றுக் கொள்வது கடினம் தான். எதுவாக இருப்பினும், இவருக்கு இது கடைசி உலகக்கோப்பையாக அமைய வாய்ப்புள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
#3. மகேந்திர சிங் தோனி:
அகில உலக கிரிக்கெட் விளையாட்டின் தலைசிறந்த ஜாம்பவான்களின் ஒருவராக விளங்கும் தோனிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராகும். 2011-இல் இருந்து இதுவரை மூன்று உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ளார் ,தோனி. அதுமட்டுமின்றி இவர் 340 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த 2019 உலகக் கோப்பை தொடரானது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வருத்தத்தை தரக்கூடிய தொடராக அமையும். முக்கியமாக, இது இந்திய ரசிகர்களுக்கு மீளா துயரை அளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கிரிக்கெட் விளையாட்டை பொருத்தமட்டில் இவருக்கு இணை இவரே. மேலும் இந்தியா ஒரு தலை சிறந்த கேப்டனுக்கு "குட்-பை" சொல்ல இருப்பது வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும். எதுவாக இருந்தாலும், இந்த கிரிக்கெட் ஜாம்பவானுக்கு உலகக்கோப்பையோடு விடை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களும் இந்திய அணிக்கு விடுத்திருக்கும் ஒரு அன்பான வேண்டுகோளாகும்.