2019 ஐ.சி.சி உலகக் கோப்பை போட்டியில் 24 வது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலக நம்பர் 1 ஒருநாள் அணியான இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் பயங்கர வடிவத்தில் உள்ளது, அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. ஆப்கானிஸ்தான் அணி புள்ளிபட்டியலில் எந்தொரு ஒரு புள்ளியையும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி நாளை நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று தங்களது வெற்றியை தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் இந்த போட்டியில் இருந்து முதல் வெற்றியைப் பெறும் என்று நம்புகிறது. எனவே தற்போது போட்டி விவரங்கள், அணி விவரம், விளையாடும் 11 வீரர்கள் பற்றியை தகவல்களை காண்போம்.
போட்டி விபரங்கள்:
தேதி: செவ்வாய், ஜூன் 18, 2019
நேரம்: இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கும்.
இடம்: ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்
லீக்: 24வது லீக் ஐசிசி உலகக் கோப்பை 2019
லைவ் டெலிகேஸ்ட்: ஸ்டார் நெட்வொர்க்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட் ஸ்டார்
ஓல்ட டிராஃபோர்ட் மைதானத்தின் புள்ளிவிவரங்கள்:
முதல் இன்னிங்ஸ் சராசரி: 217
இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி: 192
அதிகபட்ச மொத்தம்: 336/5 (50 ov) IND vs PAK
குறைந்தபட்ச மொத்தம்: 45/10 (40.3 ov) Can vs
ENG
Highest Chased: 286/4 (53.4 Ov) by ENG vs NZ
Lowest Defended: 221/8 (60 Ov) by ENG vs Nz
அணி விவரங்கள்
இங்கிலாந்து அணி
- தொடக்க வரிசையில் மொயீன் அலி மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மார்க் வூட் அல்லது லியாம் பிளன்கெட் இவர்களில் ஒருவர் வெளியேறுவார்கள்.
- இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி
- தொடக்க வரிசையில் நஜிபுல்லா ஷத்ரான் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
- முஜீப் உர் ரஹ்மானும் விளையாடும் லெவன் வீரர்களில் இடம்பெறலாம்.
- ஆப்கானிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
முக்கிய வீரர்கள்
இங்கிலாந்து அணி
- ஜேசன் ராய்
- ஜோஸ் பட்லர்
- ஜோஃப்ரா ஆர்ச்சர்
ஆப்கானிஸ்தான் அணி
- ஹஸ்ரதல்லாஹ் ஷஜாய்
- முகமது நபி
- ரஷித் கான்
விளையாடும் 11 வீரர்கள்
இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயோன் மோர்கன் ( கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மோயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் / லியாம் பிளன்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷித்
ஆப்கானிஸ்தான் - ஹராத்துள்ளா ஜாய், ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துள்ளா ஷாகிதி, நஜிமுல்லா ஜத்ரான், முகமது நபி, குலப்தீன் நயிப் (கேப்டன்), ரசித் கான், தவ்லத் ஜார்தான், முஜீப் உர் ரஹ்மான், ஹமீத் ஹாசன், இக்ராம் அலி கில்