2019 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பை தொடர் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இங்கிலாந்தில் உள்ள அதிகமான மைதானங்கள் பேட்டிங்க்கு ஏற்றவாரு இருக்கிறது. ஆய்வின் படி கடந்த 3-4 வருடங்களாக அதிக ரன்கள் எடுத்தது தெரியவந்தது. இங்கிலாந்து மைதானம் பவுலிங் மைதானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உலகக் கோப்பை தொடரும் முன்னதாக பலர் பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
என்னதான் பேட்டிங் மைதானமாக இருந்தாலும் இந்த உலகக் கோப்பையில் பந்து வீச்சாளர்களின் திறமையால் பல விக்கெட்களை குவித்துக் கொண்டே இருக்கின்றனர். இதுவரை போட்டிகளில் குறைந்த ஸ்கோர் போட்டிகள் இல்லாத போதிலும், 250 ரன்கள் இலக்கை துரத்துவதற்கு கடினமாக இருக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதற்கு காரணமாக பந்து வீச்சாளர்களின் திறமைகள் மட்டுமே ஆகும். அதுமட்டுமின்றி பந்து வீச்சாளர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் ஒரு பெரிய போட்டியை அளிப்பவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.
இந்த உலகக் கோப்பையில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பந்து வீச்சாளர்கள் பலர் ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக வேகப் பந்து வீச்சாளர் பும்ரா, பாட் கம்மின்ஸ் பல நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்த உலகக் கோப்பையின் இரண்டாம் பாதியில் பல சாதனைகளை பதிவு செய்ய பந்துவீச்சாளர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். உலகக் கோப்பை தொடக்கத்தில் இருந்தே அதிக விக்கெட் எடுக்கும் போர் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் 3 பந்துவீச்சாளர்கள் இங்கு உள்ளனர்.
#3.ஜோஃப்ரா ஆர்ச்சர் - இங்கிலாந்து வீரர்

ஏப்ரல் 2019 இல், ஆர்ச்சர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக அயர்லாந்து மற்றும் பாக்கிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஓவர்களில் போட்டிகளில் பங்கேற்றார். இதன் பிறகு ஜோஃப்ரா ஆர்ச்சர் மே மாதம் 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்திற்கு சர்வதேச அளவில் அறிமுகமாகி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்.
இவர் வலது கை வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 6 போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளார். இதில் இவர் 287 பந்துகள் வீசியுள்ளார். 9 விக்கெட்கள் எடுத்து 27.0 சராசரியை பெற்றுள்ளார். இவர் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்று 4 ஓவர்கள் வீசியுள்ளார். இதுவரை எந்தொரு சாதனைகளையும் படைக்காத இவர் இந்த உலகக் கோப்பையில் பல சாதனைதள் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடிய மூன்று போட்டிகளில் 6 விக்கெட்களை பெற்றுள்ளார். இவர் பவர் பிளே மற்றும் டெட் ஓவர்கள் வீசி 22.50 சராசரியை கொண்டுள்ளார். எனவே இங்கிலாந்து அணிக்கு முக்கிய வீரராக தற்போது திகழ்கிறார்.
#2. யூசுவெந்திர சஹால் - இந்திய அணி பந்து வீச்சாளர்

யூசுவெந்திர சஹால் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றம் சிறந்த பந்து வீச்சாளர் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு உலகக் கோபீபையில் இவரின் பந்து வீசு நிலை சிறிதளவு மோசமாக இருந்தது. இருப்பினும் இவரின் முன்னாள் போட்டியையும் அனுபவத்தையும் கொண்டு இந்திய அணி நிர்வாகம் இவரை தேர்வு செய்தது. இவர் மொத்தம் 40 ஓடிஐ தொடரில் விளையாடியுள்ளார். இவர் 2113 பந்துகளை வீசி 71 விக்கெட்களை எடுத்துள்ளார். அதிலும் மொத்தம் இரண்டு முறை 5 விக்கெட்களை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இவர் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவுடன், சஹால் இரண்டாவது ஸ்பின்னராக விளையாடும் 11 ல் இடம் பெற்றார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் சாஹல் 4 விக்கெட்களை பெற்று அணி வெற்றி ஒரு காரணமாக திகழ்ந்தார். இதன் பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரின் முக்கிய விக்கெட்களை எடுத்தார். இந்த இரண்டு போட்டியில் மொத்தம் 6 விக்கெட்களை பெற்று நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே இந்தாண்டு இவர் அதிக விக்கெட்களை எடுத்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
#1.மிட்செல் ஸ்டார்க் - ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சாளர்

மிட்செல் ஸ்டார்க், ஆஸ்திரேலிய சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் ஆஸ்ட்ரேலிய தேசிய அணிக்காக விளையாடுகிறார். இவர் மிகச் சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர். இவரின் மொத்த 79 ஓடிஐ தொடர்களில் 3,977 பந்துகளை வீசியுள்ளார். இதில் மொத்தம் 154 விக்கெட்களை பெற்று 21.44 சராசரியை பெற்றுள்ளது. இவர் ஓடிஐ தொடரில் 6 முறை 5 விக்கெட்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி 1 விக்கெட்டை எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை எடுத்து பல சாதனைக்கு உள்ளாகினார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 1 விக்கெட்டை எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்களை எடுத்தார். இவர் உலகக் கோப்பையில் மொத்தம் 9 விக்கெட்களை பெற்றுள்ளர். இவர் 2015 ஆம் ஆண்டு அதிக விக்கெட்களை பெற்றவர் எனும் பட்டத்தை பெற்றிருந்தார். எனவே, இந்தாண்டும் மீண்டும் சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.