உலகக் கோப்பை 2019: ஒருங்கிணைந்த இந்தியா-பாகிஸ்தான் xi

India - Pakistan combined xi
India - Pakistan combined xi

கிரிக்கெட் பொருத்தமட்டில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே உலகில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த இரு அணிகளும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை ஏற்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய முயற்சி செய்வர். இந்நிலையில் 2019 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்காக அனைத்து ரசிகர்களும் தொடக்கத்தில் இருந்தே காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளில் மற்ற அணிகளுடன் பல வெற்றிகளைப் பெற்று இருக்கிறது. ஆனால் உலகக் கோப்பை பொருத்த வரை இந்திய அணியிடம் ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உலகக் கோப்பையில் மொத்தம் மற்றுமகளில் சந்தித்துள்ளது. இதில் இந்திய அணி 6 முறையும் வெற்றியை நிலைநாட்டியது. பாகிஸ்தான் அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியை மட்டும் தொடர்ச்சியாக பெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதவுள்ளது.

இந்திய அணியில் பலம் வாயந்த வீரர்கள் பலர் இருந்தாலும, பாகிஸ்தானிலும் சில நம்பமுடியாத வீரர்கள் உள்ளனர். தற்போது இந்த இரு இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் நாளைய மோதலுக்கு தாயாராக இருக்கின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒருங்கிணைந்த xi விளையாடினால் எப்படி இருக்கும் என்பதை பற்றி காண்போம்

தொடக்க வீரர்கள்: ரோஹித் சர்மா மற்றும் இமாம் உல் ஹக்

Hit Man Rohit Sharma
Hit Man Rohit Sharma

ஹிட் மேன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினால் சிறப்பாக இருக்கும். ரோகித் சர்மா இந்த உலகக் கோப்பையில் நல்ல முறை தனது திறமையை வெளிப்படுத்தி முதல் போட்டியிலே சதம் (122) அடித்து சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அரைசதம் (57) அடித்து மீண்டும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். எனவே இந்த ஒருங்கிணைப்பில் ஹிட் மேன் முதல் இடத்தில் விளையாடினால் சிறப்பாக இருக்கும்.

இந்திய அணியின் மற்றொரு ஜாம்பவான் ஷிகர் தவானுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயம் எற்பட்டது.அதனால் பாகிஸ்தான் அணியை சேரந்த இமாம் உல் ஹக் ரோகித் சர்மாவுடன் விளையாட தகுதியானவர். இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இமாம் அரைசதம் விளாசியுள்ளார்.

நடுவரிசை வீரர்கள்: விராட் கோலி, முகமது ஹபீஸ், மற்றும் மகேந்திர சிங் தோனி

Virat Kohli and MS Dhoni
Virat Kohli and MS Dhoni

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 3ம் இடத்தை பெறுகிறார். விராட் கோலி ஓடிஐ தொடர்களில் பல சாதனைகளை படைத்துள்ளார். விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 82 ரன்களை குவித்துள்ளார். இவர் தற்போது சிறந்த நிலையில் உள்ளதால் இந்த ஒருங்கிணைப்பில் மூன்றாம் இடத்தில் விளையாட மிகச் சரியான வீரராக திகழ்கிறார்.

இந்த ஒருங்கிணைப்பில் நான்காவது இடத்தை பாகிஸ்தான் அணியின் சிறந்த பேட்ஸ்மன் முகமது ஹபீஸ் இடம் பெறுகிறார். இவர் பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து துறையிலும் சிறப்பாக விளையாடி அணிக்கு பல நன்மைகள் செய்துள்ளார். இவர் இங்கிலாந்து எதாரான போட்டியில் 82 ரன்களை குவிந்துள்ளார். எனவே இவர் இந்த ஒருங்கிணைப்பில் தகுதியானவராக இருக்கிறார்.

Pakistan - Mohammed Hafeez
Pakistan - Mohammed Hafeez

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மனுமான எம்.எஸ் தோனி இந்த ஒருங்கிணைப்பில் ஐந்தாம் இடத்தை பெறுகிறார். இவர் எந்தொரு கடினமாக சூழ்நிலையில் கூட நிதானமாக விளையாடி அணியை வெற்றி பெற வைக்கும் வீரராவார். இவரின் பேட்டிங் ஸ்டைல் மிச்சிறப்பாக இருக்கும். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் 27 ரன்களை பெற்றுள்ளார். இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். இவர் சிறந்த கேபடன் எனும் பட்டத்தை பெற்றுள்ளார்

ஆல் ரவுண்டர்கள் : ஹர்திக் பாண்ட்யா மற்றும் வஹாப் ரியாஸ்

Pakistan - Wahab Riaz
Pakistan - Wahab Riaz

ஹர்திக் பாண்டியா தனது சிறப்பான ஆட்டத்தை ஐபிஎல் 2019 முதல் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 வரை கொண்டு சென்றுள்ளார். இந்திய ஆல்ரவுண்டர் பாண்டியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பேடஸ்மன்களை தினரவிட்டார். இவரின் பந்தை எதிர்கொள்ள அனைத்து பேட்ஸ்மன்களும் சிறது அஞ்சப்படுகின்றனர். எனவே இவர் இந்த ஒருகிணைப்பிற்கு தகுதியானவராக இருப்பார்.

இவருக்கு அடுத்து பாகிஸ்தான் அணியை சேர்ந்த வஹாப் ரியாஸ் இந்த உலகக் கோப்பையில் நல்ல முறையில் தனது பவுலிங் மற்றும் பேட்கிங்கில் சிறப்பாக விளையிடி வருகிறார். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3 முக்கிய வீரர்களின் விக்கெட்களை பெற்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 45 ரன்கள் குவித்திருந்தார்.

பந்து வீச்சாளர்கள்: முகமது அமீர், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், மற்றும் யுஸ்வேந்திர சாஹல்

Pakistan - Mohammad Amir
Pakistan - Mohammad Amir

முகமது அமீர் பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராவார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை பெற்று பல சாதனைகளை படைத்தார். இதுவே, இவரின் முதல் ஓடிஐ 5 விக்கெடாகும். ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி மோதியது. இந்த போட்டியில் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராத் கோலி ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினர்.

ஐ.சி.சி பட்டியலில் ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவர் பும்ரா. இவரின் பந்துவீச்சை கண்டு அனைத்து பேட்ஸ்மன்களும் தினருவார்கள். அந்தவகையில் தென்னாப்பிரிக்காவுக்கு முதல் போட்டியில் இவர் 2 விக்கெட்களை பெற்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதாரான இரண்டாவது போட்டியில் 3 விக்கெட்களை பெற்றார். எனவே இந்த ஒருங்கிணைப்பில் இடம் பெறுகிறார் பும்ரா.

Bumrha and chahal
Bumrha and chahal

இதன் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சாளர் பவனேஷ்வர் குமார் இந்த ஒருகிணைப்பில் இடம் பெறுகிறார். இதற்கு காரணம் இவரின் சிறப்பாக பந்துவீச்சு தான். இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பும்ராவுடன் ஜோடி சேர்ந்து 3 விக்கெட்களை எடுத்தார். இவரின் விக்கெட் தான் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது.

இந்திய அணியின் மற்றொரு பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கடைசியான இடத்தை பெற்று இருக்கிறார். இவர் இந்திய அணியின் சிறந்த ஸ்பின்னராக திகழ்கிறார். இவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்களை பெற்றார். இவரின் விக்கெட் எடுப்பு தான் தென்னாப்பிரிக்கா அணியை 227 ரன்களுக்குள் சுருட்டுவநற்கு காரணமாக இருந்தது.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications