ஆல் ரவுண்டர்கள் : ஹர்திக் பாண்ட்யா மற்றும் வஹாப் ரியாஸ்
ஹர்திக் பாண்டியா தனது சிறப்பான ஆட்டத்தை ஐபிஎல் 2019 முதல் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 வரை கொண்டு சென்றுள்ளார். இந்திய ஆல்ரவுண்டர் பாண்டியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பேடஸ்மன்களை தினரவிட்டார். இவரின் பந்தை எதிர்கொள்ள அனைத்து பேட்ஸ்மன்களும் சிறது அஞ்சப்படுகின்றனர். எனவே இவர் இந்த ஒருகிணைப்பிற்கு தகுதியானவராக இருப்பார்.
இவருக்கு அடுத்து பாகிஸ்தான் அணியை சேர்ந்த வஹாப் ரியாஸ் இந்த உலகக் கோப்பையில் நல்ல முறையில் தனது பவுலிங் மற்றும் பேட்கிங்கில் சிறப்பாக விளையிடி வருகிறார். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 3 முக்கிய வீரர்களின் விக்கெட்களை பெற்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 45 ரன்கள் குவித்திருந்தார்.
பந்து வீச்சாளர்கள்: முகமது அமீர், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், மற்றும் யுஸ்வேந்திர சாஹல்
முகமது அமீர் பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராவார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை பெற்று பல சாதனைகளை படைத்தார். இதுவே, இவரின் முதல் ஓடிஐ 5 விக்கெடாகும். ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி மோதியது. இந்த போட்டியில் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராத் கோலி ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினர்.
ஐ.சி.சி பட்டியலில் ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவர் பும்ரா. இவரின் பந்துவீச்சை கண்டு அனைத்து பேட்ஸ்மன்களும் தினருவார்கள். அந்தவகையில் தென்னாப்பிரிக்காவுக்கு முதல் போட்டியில் இவர் 2 விக்கெட்களை பெற்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதாரான இரண்டாவது போட்டியில் 3 விக்கெட்களை பெற்றார். எனவே இந்த ஒருங்கிணைப்பில் இடம் பெறுகிறார் பும்ரா.
இதன் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சாளர் பவனேஷ்வர் குமார் இந்த ஒருகிணைப்பில் இடம் பெறுகிறார். இதற்கு காரணம் இவரின் சிறப்பாக பந்துவீச்சு தான். இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பும்ராவுடன் ஜோடி சேர்ந்து 3 விக்கெட்களை எடுத்தார். இவரின் விக்கெட் தான் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது.
இந்திய அணியின் மற்றொரு பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கடைசியான இடத்தை பெற்று இருக்கிறார். இவர் இந்திய அணியின் சிறந்த ஸ்பின்னராக திகழ்கிறார். இவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்களை பெற்றார். இவரின் விக்கெட் எடுப்பு தான் தென்னாப்பிரிக்கா அணியை 227 ரன்களுக்குள் சுருட்டுவநற்கு காரணமாக இருந்தது.