2019 ஆம் ஆண்டு 12வது உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. ஐந்தாவது முறையாக உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைப்பெறுகிறது. இந்த ஆண்டு பத்து அணிகள் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை போன்று பத்து ஆண்டு போட்டியிடுகின்றன.
இந்த உலகக் கோப்பை கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 10 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இன்று நடைபெற உள்ள 11வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் இரு போட்டிகளில் விளையாடி உள்ளன. ஆனால் இந்த இரு அணிகள் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளதால் போட்டி விவரங்கள், ஆடும் 11, மற்றும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள அணி பற்றிய தகவல்களை காண்போம்.
போட்டி விவரங்கள் : பாகிஸ்தான் vs இலங்கை
தேதி : 7, ஜுன் 2019, வெள்ளிக்கிழமை
நேரம் : இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கும்.
எங்கே : இங்கிலாந்து,பிரிஸ்டல் கவுண்டி மைதானம்
லைவ் டெலிஸ்ட் : ஸ்டார் நெட்வொர்க் ( star sports )
ஆன்லைன் ஸ்ட்ரீமிங் : ஹாட் ஸ்டார் ( hotstar )
அணி விவரங்கள் :
#1.பாகிஸ்தான்
இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இதில் 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை அடைந்துள்ளது. இதன் பின் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 348 ரன்களை அடித்து 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இமாம்-உல்-ஹக் மற்றும் ஃபகார் ஸமான் ஆகியோர் சிறந்த நிலையில் விளையாடுகின்றார்கள். இவர்கள் அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக விளங்குகிறார்கள். கடந்த தொடரில் பாபர் ஆசாம் 63 ரன்கள் மற்றும் முகமது ஹபீஸ் 84 ரன்கள் எடுத்தனர். ஆசிப் அலி மற்றும் சோயிப் மாலிக் ஆகியோர் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். முகமது அமீர் இரண்டு போட்டிகளில் ஐந்து விக்கெட்களை பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் அணி வீரர்கள் :
இமாம் உல் ஹக், பாகர் ஜமான், பாபர் ஆசாம், முகமது ஹபீஸ், சர்பராஜ் அஹ்மத் , சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதாப் கான், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, முகமது அமீர், ஹரிஸ் சோஹைல், முகமது ஹஸ்னைன், இமாத் வசிம், ஷஹீன் அஃப்ரிடி
முக்கிய வீரர்கள் :
- பேட்டிங் - பாபர் ஆசாம், முகமது ஹபீஸ், சர்பராஜ் அஹ்மத்.
- பவுலிங் - முகமது அமீர், வஹாப் ரியாஸ், ஷதாப் கான்.
ஆடும் 11 :
இமாம் உல் ஹக், பாகர் ஜமான், பாபர் ஆசாம், முகமது ஹபீஸ், சர்பராஜ் அஹ்மத் , சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதாப் கான், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, முகமது அமீர்
#2.இலங்கை
இலங்கை அணி தனது முதல் போட்டியை நியூசீலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. இதில் 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை பெற்றது. இதில் கருணாரத்ன அடித்த 52 ரன்கள் அதிகபட்ச ரன்னாக இருந்தது. தனது இரண்டாவது போட்டியை ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடு போது மழை காரணமாக 41 ஓவராக குறைக்கப்பட்டது. இதில் குசல் பெரேரா 78 ரன்களை அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். பேட்டிஙில் பின்னியில் உள்ள இலங்கை அணி வீரர்கள் ஜீவன் மெண்டிஸ் கடந்த போட்டியில் பெரிதளவு ரன்கள் ஏதும் அடிக்கப்படவில்லை. தொடக்க வீரரான லஷிரு திரிமன்னே தனது ஆட்டத்தை இந்த முறையும் சிறப்பாக விளையாடவில்லை என்றால் இவர்க்கு பதிலாக இளம் அவஷ்கா பெர்னாண்டோ விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணி வீரர்கள் :
திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமன்ன, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சயன் டி சில்வா, திஸர பெரேரா, இசுரு உதான, ஜீவன் மெண்டிஸ், சுரங்க லக்மால், லசித் மலிங்கா, நுவன் பிரதீப், ஜீவன் மென்டிஸ், அவஷ்கா பெர்னாண்டோ, ஜெப்ரி வாண்டெர்சே, மில்லி ஸ்ரீரிவாரனா.
முக்கிய வீரர்கள் :
- பேட்டிங் - குசல் பெரேரா,திமுத் கருணாரத்ன, திஸர பெரேரா, லஹிரு திரிமன்ன
- பவுலிங் - நுவன் பிரதீப், லசித் மலிங்கா,
ஆடும் 11 :
திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா, லஹிரு திரிமன்ன/அவஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ்,ஏஞ்சலோ மேத்யூஸ்,ஜீவன் மெண்டிஸ், தனஞ்சயன் டி சில்வா, திஸர பெரேரா, இசுரு உதான, நுவன் பிரதீப், லசித் மலிங்கா.