12வது உலகக் கோப்பை தொடர் தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் பத்து அணிகள் மோதுகிறது. 16லீக் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் பங்களாதேஷ் அணியும் இலங்கை அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் மூன்று போட்டிகள் விளையாடி ஒரு முறை மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
போட்டி விவரங்கள் :
தேதி: 11 ஜூன் (செவ்வாய்)
நேரம்: இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் நடைபெறவுள்ளது. (3:30 PM -பங்களாதேஷ், 3:00 PM - இலங்கை, 10:30 AM -இங்கிலாந்து )
இடம்: பிரிஸ்டல் கவுண்டி மைதானம், பிரிஸ்டல்
நேரலை : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க், ஹாட் ஸ்டார்.
ஒருநாள் சர்வதேச சாதனை, இலங்கை - பங்களாதேஷ்
மொத்த போட்டி - 45
இலங்கை வெற்றி - 36
பங்களாதேஷ் வெற்றி - 7
முடிவு அற்ற - 2
இந்த இரு அணிகளும் மூன்று முறை உலகக்கோப்பையில் போட்டியிட்டுள்ளது. இந்த மூன்றிலும் இலங்கை அணி வெற்றி பெற்றது.
பங்களாதேஷ் அணி :
பங்களாதேஷ் அணி இந்த உலகக்கோப்பையில் ஒருமுறை மட்டும் வெற்றியை நாடியுள்ளது. ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் இருவரும் கடந்த மூன்று போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளனர். ஷகிப் கடந்த போட்டியில் 121 ரன்கள் அடித்துள்ளார். முகம்மது சைஃபுடின், மெஹீடி ஹசன் ஆகியோர் இந்த உலகக் கோப்பையில் நடந்த அனைத்து போட்களிலும் இரண்டு விக்கெட் எடுத்து சிறப்பாக விளையாடியுள்ளனர். நாளை நடக்கவிருக்கும் போட்டியில் இவர் மீண்டும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு பலம் சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.
முக்கிய வீரர்கள் :
பேட்டிங் - தமீம் இக்பால், ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹிம்
பவுலிங் - முஸ்தாபிஜூர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன், முகமது சைஃபுடின்
விளையாடும் xi :
தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம்,சப்ர்பீர் ரஹ்மான், மஹ்முதுல்லா, மொசாட் ஹொசைன், முகமது சைஃபுடின், மெஹிடி ஹசன், மஷ்ரஃப் மோர்டாசா மற்றும் முஸ்தாபிஜூர் ரஹ்மான்.
இலங்கை அணி
இலங்கை அணியும் இந்த உலகக்கோப்பையில் ஒருமுறை மட்டும் வெற்றியை நாட்டியுள்ளது. திமுத் கருணாரத் மற்றும் குசல் பெரேரா தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். நுவன் பிரதிப் மற்றும் லக்மல் இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசீத் மலிங்கா அணிக்கு பலம் சேர்க்கும் விதத்தில் விளையாடி வருகின்றனர்.
முக்கிய வீரர்கள் :
பேட்டிங் - டிமுத் கருணாரட்ன, குசன்ஸ் மெண்டிஸ் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ்
பவுலிங் - நுவன் பிரதீப், சுரங்கா லக்மல் மற்றும் லசீத் மலிங்கா
விளையாடும் xi :
திமுத் கருணாரத்ன, குசல் பெரேரா, லஹிரு திமமன்னே, குசல் மென்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தஞ்சை டி சில்வா,திசல் பெரேரா, இசுரு உதான, சுந்தர லக்மல், லசித் மலிங்கா மற்றும் நுவன் பிரதீப்