12வது உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளது. பங்கேற்ற இரண்டு போட்டியிலும் இந்தியா வெற்றியை பெற்றது.
இந்திய அணி தனது முதல் போட்டியை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடியது. இதில் இந்திய 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்ல போட்டியில் ரோகித் சர்மா 122 ரன்கள் அடித்து பல சாதனைகளை நிறைவு செய்தார். இந்திய இரண்டாவது போட்டியை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடியது. இதில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் தவான் 117 ரன்கள் அடித்தார்.
நியூசீலாந்து அணி இந்த உலகக்கோப்பையில் மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளிலும் வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசீலாந்து அணி இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளுடன் மோதியுள்ளது. நியூசீலாந்து அணியின் குப்தில் மற்றும் ரோஸ் டெய்லர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி உள்ளனர்.
இந்நிலையில் இந்த இரு பலம் வாய்ந்த அணிகளும் ஜூன் 13 ஆம் தேதி மோதுகிறது.
போட்டி விவரங்கள் :
தேதி: வியாழன், ஜூன் 13, 2019
நேரம்: இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் நடைபெறும்.
இடம்: ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்,இங்கிலாந்து.
லீக்: ஐசிசி உலகக் கோப்பை 2019
லைவ் டெலிஸ்ட்: ஸ்டார் நெட்வொர்க்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட் ஸ்டார்
புள்ளிவிவரங்கள் :
சராசரி 1st இன்னிங்ஸ் ஸ்கோர்: 252
சராசரி 2nd இன்னிங்ஸ் ஸ்கோர்: 220
அதிகபட்ச மொத்தம்: 481/6 (50 ஓவல்) ENG vs AUS
குறைந்தபட்ச மொத்த: 83/10 (23 Ov) RSA vs ENG
Highest chased: 350/3 (44 OV) மூலம் ENG Vs NZ
Lowest Defended: 195/9 (50 Ov) WI vs ENG
அணி விவரம் :
இந்தியா அணி :
- ஷிகர் தவான் காயம் காரணமாக அடுத்த மூன்று வாரங்களுக்கு போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- கே.எல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.
- தற்போது இவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் விளையாடுவார் என்னும் தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து அணி :
- நியூசீலாந்து அணியில் எந்தொரு மாற்றமும் இல்லாமல் முன்னோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இருப்பினும் ஹென்றி நிக்கோல்ஸ் கோலின் முன்ரோவை வரிசையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய வீரர்கள் :
இந்தியா
- ரோஹித் சர்மா
- விராத் கோலி
- ஜஸ்ரிட் பம்ரா
நியூசிலாந்து
- கேன் வில்லியம்சன்
- ரோஸ் டெய்லர்
- ட்ரண்ட் போல்ட்
ஆடும் 11 :
இந்தியா - ராகுல் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோஹ்லி, தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர், கேதர் ஜாதவ், எம்.எஸ். டோனி, ஹார்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ், யூசுந்தேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், ஜாஸ்ரிட் பும்ரா
நியூசீலாந்து - மார்ட்டின் குப்தில், காலின் முன்ரோ / ஹென்றி நிக்கோலஸ், கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டாம் லதாம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், ட்ரெண்ட் போல்ட், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன்