ஐசிசி உலகக் கோப்பை தொடர் தொடங்கி மூன்று வாரங்கள் ஆன நிலையில் நாளை 19 லீக் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகிறது. 2019 உலகக் கோப்பையில் இந்த இரு அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த உலகக் கோப்பையில் தகுதி பெற பல போராட்டங்களை கடந்து வந்தது குறிப்பிடதக்கது.
இந்த இரு அணிகளும் உலகக் கோப்பையில் மொத்தம் 7 போட்டிளில் மோதியுள்ளது. இதில் 6 போட்டிகள் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஒரு முறை மட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. எனவே நாளை நடக்கும் போட்டி விவரங்கள், விளையாடும் 11 வீரர்கள், முக்கிய வீரர்கள் பற்றய தகவல்களை காண்போம்.
போட்டி விவரங்கள்
தேதி: வெள்ளி, 14 ஜூன் 2019
நேரம்: இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் நடைபெறும்.
இடம்: தி ரோஸ் பவுல், சவுத்தாம்ப்டன்
லீக்: ஐசிசி உலகக் கோப்பை 2019
லைவ் டெலிகேஸ்ட்: ஸ்டார் நெட்வொர்க்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட் ஸ்டார்
புள்ளிவிவரங்கள்
முதல் இன்னிங்ஸ் சராசரி: 250
இரண்டாம் இன்னிங்ஸ் சராசரி: 214
அதிகபட்ச மொத்தம்: 373/3 (50 ஓவர்) ENG Vs PAK
குறைந்தபட்ச மொத்தம்: 65/10 (24 ஓவர்) USA vs AUS
Highest chased: 306/7 (49 Ov) by NZ vs EN
Lowest Defended: 251/7 (50 Ov) by ENG vs SL
உலகக் கோப்பையில் மோதிக்கொண்ட போட்டிகளின் எண்ணிக்கை :
மொத்தம் - 7
இங்கிலாந்து வெற்றி - 6
வெஸ்ட் இண்டீஸ் - 1
அணி விவரம்
இங்கிலாந்து அணி :
- மோயீன் அலி தொடக்க வரிசையில் பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மார்க் வூட் அல்லது லியாம் ப்ளான்கெட் இவருக்கு தனது தொடக்க ஆட்டத்தை விட்டுதருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடி வருகின்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி :
- கெமர் ரோச் இடத்தில் ஆண்ட்ரே ரசல் இடம்பெறலாம்.
- எவீன் லீவிஸ் பதிலாக பிராவோ விளையாட உள்ளார்.
முக்கிய வீரர்கள்
இங்கிலாந்து:
1.ஜேசன் ராய்
2.ஜோஸ் பட்லர்
3.ஜோஃப்ரா ஆர்ச்சர்
வெஸ்ட் இண்டீஸ் :
1.கிறிஸ் கெய்ல
2.ஷாய் ஹோப்
3.ஜாசன் ஹோல்டர்
விளையாடும் 11
இங்கிலாந்து வீரர்கள் :
ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், ஈயோன் மோர்கன் ( கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மோயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் / லியாம் பிளன்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷித்
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் :
கிறிஸ் கெயில், பிராவோ, ஷை ஹோப், நிக்கோலஸ் பூரன், சிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், கார்லோஸ் ப்ராத்வாட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ்