12வது உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 3 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு போட்டி மழை காரணமாக டாஸ் போடாமலே கைவிடப்பட்டது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 8வது லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 14லீக் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 2 போட்டியில் தோல்வி அடைந்து 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. மீதமுள்ள 1 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. எனவே இந்த இரு அணிகளும் லீக் போட்டியில் மோதுகிறது.
போட்டி விவரங்கள்
தேதி: ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019
நேரம்: இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் மூன்று மணி அளவில் நடைபெறும்.
இடம்: ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்
லீக்: 20வது லீக் ஐசிசி உலகக் கோப்பை 2019
லைவ் டெலிகேஸ்ட்: ஸ்டார் நெட்வொர்க்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட் ஸ்டார்
புள்ளிவிரங்கள்
முதல் இன்னிங்ஸ் சராசரி: 214
இரண்டாம் இன்னிங்ஸ் சராசரி: 192
அதிகபட்ச மொத்தம்: 318/7 (50 ov) SL vs ENG
குறைந்தபட்ச மொத்தம்: 45/10 (40.3 Ov) Can vs ENG
Highest Chased: 286/4 (53.4 Ov) ENG vs NZ
Lowest Defended: 221/8 (60 Ov) ENG vs NZ
உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதிய எண்ணிக்கை
மொத்தம் போட்டிகள் : 6
இந்தியா வெற்றி : 6
பாகிஸ்தான் வெற்றி : 0
அணி விவரம்
இந்திய அணி :
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஷிகர் தவான் சதம் அடித்தார்.
- அந்த போட்டியில் தவானுக்கு காயம் ஏற்பட்டது, இதனால் இவர் மூன்று வாரங்களுக்கு விளையாடமாட்டார்.
- கே.எல் ராகுல் தொடக்கத்தில் களமிறங்குவார்.
- விஜய் சங்கர் இந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம்
பாகிஸ்தான் அணி :
- ஷாஹீன் அஃப்ரிடி பதிலாக இந்த முறை சதாப் கான் விளையாடும் xi ல் இணைக்கப்படுவார்.
- சோயிப் மாலிக் மோசமாக விளையாடி வருவதால் இமாத் வசிம் அல்லது முகமது ஹஸ்னைன் இடம் பெற வாய்ப்பு உண்டு.
முக்கிய வீரர்கள்
இந்தியா வீரர்கள்
- ரோகித் சர்மா
- விராட் கோலி
- பும்ரா
- சஹால்
பாகிஸ்தான் வீரர்கள்
- இமாம்-உல்-ஹக்
- பாபர் ஆசம்
- வஹாப் ரியாஸ்
விளையாடும் 11 வீரர்கள்
இந்திய வீரர்கள் : விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, கே.எல் ராகுல், ரிஷாப் பண்ட்/விஜய் சங்கர், கேதர் ஜாதவ், எம்.எஸ் தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யூ.சஹால், புவனேஷ்வர் குமார், பும்ரா
பாகிஸ்தான் வீரர்கள்; இமாம் உல் ஹக், பாகர் ஜமான், பாபர் ஆசாம், முகமது ஹபீஸ், சர்பராஜ் அஹ்மத் , இமாம் வசிம்/முகமது ஹஸ்னைன், ஆசிப் அலி, ஷதாப் கான், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, முகமது அமீர்