2019 உலகக்கோப்பையின் 45 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் மோதி வருகிறது. மழையால் இரண்டு நாட்கள் நடைப்பெற்ற அரையிறுதியின் முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறாயது.
இன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா அணியும் மூன்றாம் இடத்தை பிடித்த இங்கிலாந்து அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி பிர்மிங்காம்மில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி ஜூலை 14ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.
போட்டி விவரங்கள் :
தேதி: வியாழக்கிழமை, ஜூலை 11, 2019
இடம்: பிர்மிங்காம், எட்ஜ்பாஸ்டான் மைதானம்
நேரம்: 03:00 PM ( இந்திய நேரப்படி)
லீக்: ஐசிசி உலகக் கோப்பை 2019
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்
ஆன்லைன் ஸ்ட்ரீமிங்: ஹாட்ஸ்டார்
இடம் புள்ளிவிவரங்கள்:
சராசரி 1 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 227
சராசரி 2 வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 181 அதிகபட்ச மொத்தம்: 408/9 (50 ஓவர்) ENG vs NZ
குறைந்தபட்ச மொத்தம்: 70/10 (25.2 ஓவர்) AUS vs ENG
Highest Chased: 280/4 (53.3 ஓவர்) AUS vs ENGLowest Defended: 129/7 (20 ஓவர்) IND vs ENG
நேருக்கு நேர் மோதிய எண்ணிக்கை:
மொத்தம்: 148
இங்கிலாந்து: 61
ஆஸ்திரேலியா: 82
சமம்: 2
முடிவற்ற: 3
உலகக் கோப்பையில் மோதிக்கொண்ட எண்ணிக்கை:
மொத்தம்: 8
இங்கிலாந்து: 2
ஆஸ்திரேலியா: 6
அணி விவரங்கள்:
இங்கிலாந்து அணி
- ஜேசன் ராய் தனது இடமான பேட்டிங் வரிசையில் முதலிடம் வகிப்பார்.
- மார்க் வுட்டிற்குப் பதிலாக லியாம் பிளங்கெட் மீண்டும் வாய்ப்பு உண்டு.
- இங்கிலாந்து அணி 12 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது.
ஆஸ்ட்ரேலியா அணி
- ஆஸ்திரேலியா மாறாத தொடக்க வரிசையுடன் களமிறங்கும்.
- அணி ஒரு சிறப்பு சுழற்பந்து வீச்சாளர் விளையாட விரும்பினால் ஆடம் ஜாம்பா ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப்க்கு பதிலாக இடம் பெறுவார்.
- ஆஸ்திரேலியா அணி 14 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.
முக்கிய வீரர்கள்:
இங்கிலாந்து அணி
- பேர்ஸ்டோவ்
- ஜோ ரூட்
- கிறிஸ் வோக்ஸ்
- ஜோப்ரா ஆர்ச்சர்
ஆஸ்திரேலியாஅணி
- டேவிட் வார்னர்
- ஆரோன் பின்ச்
- மிட்செல் ஸ்டார்க்
- பாட் கம்மின்ஸ்
விளையாடும் 11 வீரர்கள் :
இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஈயன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் / லியாம் பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத்
ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், உஸ்மான் குவாஜா, ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்ச் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா மற்றும் நாதன் கூல்டர்-நைல்