ஐபிஎல் -லில் பங்குபெறும் அனைத்து 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் பிளேயர்களின் இறுதிப்பட்டியலை கடைசி நாளான நேற்று வெளியிட்டனர். வியக்கத் தக்க மாற்றங்கள் சில அணிகள் செய்திருக்கின்றனர். உதாரணத்திற்கு இந்தியா ஜாம்பவான்களாகக் கருதப்படும் யுவராஜ் மற்றும் கம்பிறை அவர்களது அணிகள் தக்க வைக்காமல் ரிலீஸ் செய்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலிய டி20 கேப்டனான ஆரோன் பின்சை பஞ்சாப் அணி ரிலீஸ் செய்துள்ளது.
கடந்த ஆண்டு முக்கிய பந்தயக் குதிரையாக விளங்கிய ஜெயதேவ் உனட்கட் ராஜஸ்தான் அணியால் 11.5 கோடிக்கு வாங்கப்பட்ட நிலையில் சொல்லிக் கொள்ளும் அளவில் கடந்த சீசனில் விளையாடத் தவறியதால் அவரை ரிலீஸ் செய்துள்ளது ராஜஸ்தான் அணி.
இங்கிலாந்து அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ஐந்து ஒருநாள் போட்டிகள் ஒரு t20 என்று இரு தொடர்களையும் கைப்பற்றியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் வெற்றியைக் கொண்டு முன்னிலையில் உள்ளது இங்கிலாந்து. இரண்டாம் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஜோ ரூட் தனது பதினைந்தாவது டெஸ்ட் செஞ்சுரியை நிவர்த்தி செய்தார்.பந்து அங்கும் இங்குமாய் சிபின்னாகி கொண்டிருந்தவேளையில் ஜோ ரூட் நிதானமாக ஆடி அணிக்கு வலுவான ரன்களை சேர்த்தார்.
துணை கண்ட பிட்சில் ஜோ ரூட் பலமுறை நன்கு ஆடிருந்தாலும் இந்தச் சதமானது மிகவும் முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது.முதல் டெஸ்டில் நல்ல தொடக்கம் ரூட்டிற்கு கிடைத்திருந்தாலும் அதைப் பெரிய ஸ்கோராக மாற்றத் தவறினார்.இவர் சுழற்பந்துவீச்சை நன்றாக விளையாடமாட்டார் என்று இவர்மீது விமர்சனம் எப்போதும் வைக்கப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவ் ரூட்டை பதம் பார்த்தது மறந்திருக்க மாட்டீர்கள்.
மேலும் பந்தை நெடுந்தூரம் அடிக்கும் பவர் ஹிட்டிங் எனப்படும் திறன் இவரிடம் இல்லை.சுழற்பந்துவீச்சை நன்கு ஆடாத காரணத்தினாலும் பவர் ஹிட்டிங் இல்லாதனாலும் கடந்த சீசன் ஐபிஎல் ஏலத்தில் ஓரங்கட்டப்பட்டார். எந்த அணியும் இவரை எடுக்க முன்வரவில்லை.
எந்த டீமும் தம்மை எடுக்காதது மிகவும் ஏமாற்றமளிப்பதாக ஜோ ரூட் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.நான் எந்த அணியை எடுத்துக்கொண்டாலும் அவ்வணி லெவனில் நன்றாகப் பொருந்திருப்பேன் எனவும் கூறியிருந்தார். எனக்கு அங்குச் சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை நல்ல டி20 போட்டிகளை ஆட வேண்டும் என்பதே தனது எண்ணமாக இருந்தது என்று தனது ஏமாற்றத்தைப் பதிவு செய்தார்.
இதற்கிடையே ஜோ ரூட்டின் ஸ்பின் ட்ராக் சதத்தினை கண்ட சௌரவ் கங்குலி அவரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும் இச்சதம் டர்னிங் ட்ராக்கில் One of the best ஆக இருக்கும் என டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.
தனது டீவீட்டில் சக நண்பரான டெல்லி டேர்டெவில்ஸ் கோ-ஓனர் பார்த் ஜிண்டாலை டேக் செய்துள்ளார். ஜோ ரூட்டை டெல்லி அணியில் எடுக்குமாறு சூசகமாகப் பதிவிட்டுள்ளார் தாதா.
எனவே ஐபிஎல் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் தாதாவின் இந்த ட்விட் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. டெல்லி டேர்டெவில்ஸ் தாதாவின் பரிந்துரையை ஏற்குமா அல்லது நிராகரிக்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அந்த ட்வீட் பின்வருமாறு :