தென் ஆப்ரிக்கா அணியின் முக்கிய வீரர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு....!

Pravin
ஸ்டைன்
ஸ்டைன்

தென் ஆப்ரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா அணியில் நீண்ட காலமாக சிறந்த பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் டேல்ஸ் ஸ்டைன். 36 வயதாகும் டேல்ஸ் ஸ்டைன் 1983ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள பாலாபெவ்வா என்ற இடத்தில் பிறந்தவர். இவர் முதன் முதலில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள போர்ட் எலிசபெத் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.

டேல் ஸ்டைன் இளம் வீரராக அறிமுகமான நேரத்தில் தென் ஆப்ரிக்கா அணியின் அதிக வேகமாக வீச கூடிய பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தார். தொடர்ந்து தனது சிறப்பான பந்து வீச்சினால் எதிர் அணி வீரர்களை திணறடிக்க கூடிய திறமை வாய்ந்தவர். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டேல்ஸ் ஸ்டைன். ஸ்டைன் 2004-2005 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளுர் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக தென் ஆப்ரிக்கா அணியில் நிரந்தர வேகபந்து வீச்சாளராக மாறினார்.

டேல் ஸ்டைன்
டேல் ஸ்டைன்

தென் ஆப்ரிக்கா அணிக்காக நீண்ட காலம் விளையாடியுள்ள ஸ்டைன் தென் ஆப்ரிக்கா அணிக்காக விளையாடிய வீரர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தகாரர் ஸ்டைன் மட்டும் தான். டேல்ஸ் ஸ்டைன் இதுவரை 93 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் விளையாடி அதில் 439 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். டேல்ஸ் ஸ்டைனின் டெஸ்ட் போட்டிகளின் பந்து வீச்சின் சாரசரி 22.95. சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜீம்மி ஆன்டர்சன்(575), மெக்ராத் (563), வாக்ஸ்(519), ஸ்வார்ட் ப்ராட் (450) இவர்களை தொடர்ந்து ஸ்டைன் 439 விக்கெட்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

ஸ்டைன்
ஸ்டைன்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளின் 26 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அதே போல் 27 முறை ஒரு இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அதே போல் 2008-09 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்கா அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி டெஸ்ட் போட்டியில் வரலாற்று போட்டியாக ஸ்டைன்க்கு அமைந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் உள்ள எம்ஜிசி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பத்து விக்கெட்களை வீழத்தி அசத்தினார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 11 விக்கெட்களை வீழ்த்தி 60 ரன்களை விட்டு கொடுத்ததே குறைந்த ஸ்டரைக் ரேட்டாக உள்ளது. டேல் ஸ்டைன் ஆசியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த ஸ்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். அவரின் ஸ்ரைக் ரேட் 42.9 அவருக்கு அடுத்து இடத்தில் வால்ஸ் 45.2.

தென் ஆப்ரிக்கா அணியில் தொடர்ந்து சிறந்த பந்து வீச்சாளராக இருந்து வந்த ஸ்டைன் ஓய்வை அறிவித்துள்ள நிலையில் தென் ஆப்ரிக்கா அணிக்கு இது பெரிய இழப்பாக பார்க்கப்படுகின்றது. ஸ்டைன் தொடர்ந்து ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now