#2 6/13 vs பாகிஸ்தான், ஜோகன்னஸ்பர்க் 2013
மிகவும் பசுமையான இந்த மைதானத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தானின் ஆரம்ப பௌலர்கள் மற்றும் ஆஃப் ஸ்பின் முகமது ஹபீஸ் சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தி 253 ரன்களில் தென்னாப்பிரிக்காவை சுருட்டியது.
இருப்பினும் தென்னாப்பிரிக்கா நம்பிக்கையை இழக்காமல் அனுபவ பௌலர் ஸ்டெய்ன் மூலம் மீண்டது. இவர் இந்த போட்டியில் அதிரடி பௌலிங்கை வெளிபடுத்தினார்.
டேல் ஸ்டெய்ன் தனது அவுட் ஸ்விங் மூலம் முதலில் முகமது ஹபிஸை வீழ்த்தினார். அடுத்தாக பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் நஸீர் ஜம்ஹீட், ஸ்டெய்னின் வேக இன்-ஸ்விங் பௌலிங்கை சரியாக எதிர்கொள்ளாத காரணத்தால் கேட்ச் ஆனார்.
ஸ்டெய்ன் அடுத்ததாக பாகிஸ்தானின் மிகப்பெரிய பேட்ஸ்மேன் யூனிஷ் கானின் விக்கெட்டை கைப்பற்றினார். யோனிஷ் கான் முதல் ஸ்லிப்பிரிடம் கேட்ச் ஆனார். அதன்பின் மீண்டும் கடைநிலை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை ஸ்டெய்ன் வீழ்த்தினார்.
பாகிஸ்தான் அணிகள் ஸ்டெய்னின் அருமையான அவே ஸ்விங் பௌலிங்கை சரியாக எதிர்கொள்ளாத காரணத்தால் 49 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இப்போட்டியில் ஸ்டெய்ன் வீழ்த்திய 6 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகள் ஸ்லீப் ஃபீல்டரால் கேட்ச் பிடிக்கப்பட்டது. இதற்கு முதன்மை காரணம் ஸ்டெய்னின் அவுட் ஸ்விங்.
இதேபோல் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டெய்ன் 5- விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இப்போட்டியில் 60 ரன்களை மட்டுமே ஸ்டெய்ன் அளித்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.