#3 10 விக்கெட்டுகள் vs ஆஸ்திரேலியா, மெல்போர்ன் 2008
இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரது சிறந்த பௌலிங் திறனாகும்.
ஸ்டெய்ன் உலக கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருந்தார். இவரை உலகறியச் செய்த போட்டி என்றால் 2008ல் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியே ஆகும். தென்னாப்பிரிக்கா பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஸ்டெய்ன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறினார். இருப்பினும் மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை ஸ்டெய்ன் வீழ்த்தினார்.
முதல் இன்னிங்சில் சைமன் கட்டிச்-ஐ 1 ரன்னில் வீழ்த்தினார். அடுத்ததாக மிகப்பெரிய பேட்ஸ்மேன் மைக்கல் ஹாசி எட்ஜ் ஆகி டக் அவுட் ஆனார். அதன்பின் கடைநிலை விக்கெட்டுகளை வீழ்த்துவதில் ஸ்பெஷலிஸ்டான ஸ்டெய்ன் கடைசி 3 டெய்ல் பேட்ஸ்மேன்களை சாய்த்தார்.
அத்துடன் பேட்டிங்கில் ஜே பி டுமினியுடன் கைக்கோர்த்து 180 ரன்கள் பார்டனர்ஷீப் அமைத்து ஸ்டெய்ன் விளையாடினார். இதன்மூலம் தென்னாப்பிரிக்கா 65 ரன்கள் முன்னிலை வகிக்க முடிந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை ஸ்டெய்ன் வீழ்த்தினார். அதன்பின் ஆஸ்திரேலியா ஒரு நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த தொடங்கியது. சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் பந்துவீச வந்த ஸ்டெய்ன் நன்றாக நிலைத்து விளையாடி கொண்டிருந்த மைக்கேல் கிளார்க் மற்றும் ஆன்ரிவ் சைமன்ஸின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்கா 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரையும் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா. இந்த போட்டி ஸ்டெய்ன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத போட்டியாகும். இப்போட்டியில் மொத்தமாக இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 110 ரன்களை அளித்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.