2019 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மே 30 அன்று தொடங்க உள்ள 2019 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் ஓவல் மைதானத்தில் மோத உள்ளன. இந்த போட்டியிலிருந்து தென்னாப்பிரிக்க அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் காயம் காரணமாக விலகியுள்ளார். கடந்த வாரத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஸ்டெய்ன் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் அப்பொழுது யாருக்கும் தெரியவில்லை. இதற்கான காரணம் 2019 ஐபிஎல் தொடரில் தோல்பட்டையில் ஸ்டெயினிற்கு ஏற்பட்ட காயமே ஆகும்.
35 வயதான தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர், 2019 ஐபிஎல் தொடரின் இடைப்பகுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நாதன் குல்டர் நில்-ற்கு பதிலாக சேர்க்கப்பட்டார். இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற இவர் அதன்பின் தோல்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அவரை உடனடியாக நாடு திரும்பமாறு அறிவுறுத்தியது. பின் தென்னாப்பிரிக்க மருத்துவ குழவால் கண்காணிக்கப்பட்டு வந்தார். சிறிது நாட்களுக்குப் பிறகு டேல் ஸ்டெய்ன் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடருக்கு தயராகி விட்டார் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
தென்னாப்பிரிக்க தலைமை பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்ஸன் பத்திரிகைக்கு தெரிவித்தவதாவது,
"காகிஸோ ரபாடாவிற்கு காயம், டேல் ஸ்டெய்னிற்கும் காயம், இருப்பினும் அவர்கள் தங்களது உறுதியான ஆட்டத்திறனுடன் உள்ளனர்."
"இருவருக்கும் பெரிய அளவிற்கு காயம் ஏதும் இல்லை. இருப்பினும் தொடர்ந்து எங்கள் மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. இருவரும் கண்டிப்பாக முழு உடற்தகுதி பெற்று உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெறுவார்கள்".
தற்போது ஸ்டெய்ன் கூடிய விரைவில் நலம் பெறுவார் என தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி, மே 30ல் இங்கிலாந்து அணியை தொடர்ந்து ஜீன் 2 அன்று வங்கதேசத்தையும், ஜீன் 5 அன்று இந்தியாவையும் எதிர்கொள்கிறது. ஸ்டெய்ன் இல்லாததால் தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சை காகிஸோ ரபாடா வழிநடத்திச் செல்வார். லுங்கி நிகிடி, கிறிஸ் மோரிஸ் மற்றும் ஆன்டில் பெஹில்க்வாயோ ஆகியோர் தென்னாப்பிரிக்க அணியின் மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவார்.
தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பைக்கு தயாராகும் விதத்தில் இலங்கைக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. ஹாசிம் அம்லாவின் அரைசதம் மற்றும் ஃபேப் டுயுபிளஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தினால் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி தென்னாப்பிரிக்க அணியின் பவர் ஹீட்டிங் வேகப்பந்து வீச்சிற்கு தாக்கு பிடிக்காமல் 251ற்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கிடையில் உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக கிரிக்கெட் வள்ளுநர்களால் கணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. அதன்பின் நேற்று(மே 27) நடந்த ஆப்கானிஸ்தானிற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது.