2019 ஐசிசி உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது. அந்த போட்டியில் அனுபவம் மிகுந்த மகேந்திர சிங் டோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் போன்ற அனுபவமற்ற வீரர்கள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே களமிறக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அரையிறுதிப் போட்டியில் முதல் மூன்று பேட்ஸ்மென்கள் விரைவிலேயே ஆட்டமிழந்த நிலையில், நான்காமிட பேட்டிங்கில் ஒரு சிறந்த பேட்ஸ்மேனின்றி தவித்து வந்த இந்திய அணிக்கு பெருத்த அடி விழுந்தது. மேலும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஃபினிஷராக விளங்கி வந்த தோனி, தற்போது போதிய ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறியே வந்துள்ளார். 2019 உலகக்கோப்பை தொடரில் கூட பல ஆட்டங்களில் இவர் மந்தமாகவே தான் விளையாடினார். இதனால், சமூக வலைதளங்களில் இவரின் ஆட்டத்திறனை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. எனவே, ஐசிசியின் மூன்றுவிதமான உலக கோப்பை தொடர்களையும் வென்று தந்த ஒரே கேப்டனான தோனியின் இருண்ட தருணங்களை பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.
#1.2007 ஐசிசி உலக கோப்பை தொடர்:
2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் இந்திய அணி வெளியேறி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி அளித்தது. இதனால் கோபம் அடைந்த ரசிகர்கள் அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரரான மகேந்திர சிங் தோனிக்கு ஜார்கண்டிலுள்ள வீட்டை சில அரசியல்வாதிகள் கற்களை கொண்டு தாக்கினர். கிரிக்கெட் வரலாற்றில் இப்படிப்பட்ட மோசமான தருணம் நடைபெற்றது, இந்திய அணிக்கு சில கசப்பான நினைவுகளை அளித்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோனியின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ஐந்து மாதங்களுக்குப் பின்னர், இளம் படையைக் கொண்டு இந்திய டி20 அணியை வழிநடத்திய தோனி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முதலாவது உலகக் கோப்பை தொடரை வென்று கொடுத்து அசத்தினார்.
#2.2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேங்க் தொடர்:
2011-12 ஆண்டுகளில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபியில் 0-4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்திய அணி தொடர்ந்து அதே அணிக்கு எதிராக காமன்வெல்த் பேங்க் தொடரில் விளையாடிய வேண்டியிருந்தது. இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் பங்கேற்ற இந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணியை மகேந்திர சிங் தோனி வழிநடத்தினார். அப்போது அணியில் இடம் பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் முறையே 33, 39 போன்ற அதிக வயதில் காணப்பட்டதால் பீல்டிங்கில் இவர்கள் சிறப்பாக செயல்படவில்லை. இதன் காரணமாக இவர்கள் மூவரையும் ஒரே நேரத்தில் விளையாட தோனி அனுமதிக்கப்போவதில்லை என்று கூறினார். இருப்பினும், அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட கௌதம் கம்பீர் தொடரின்அதிக ரன்களைக் குவித்த இரண்டாவது வீரர் என்ற என்ற சாதனையை படைத்தார். எனவே, மூத்த வீரர்களுக்கும் தோனிக்கும் இடையே சற்று உரசல் காணப்பட்டது. இதனால், பல்வேறு ஊடகங்களும் ரசிகர்களும் தோனியை கடுமையாக விமர்சித்தனர். மற்றொருபுறம் இந்திய அணி அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் தொடரில் இருந்து வெளியேறியது. தோனியின் தவறான அணித் தேர்வு தான் இத்தகைய தோல்விக்கு காரணம் என பலரால் குற்றம்சாட்டப்பட்டது. இந்த முத்தரப்பு தொடர் பின்னர் கௌதம் கம்பீர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் இந்திய அணியில் இருந்து நிரந்தரமாக கழட்டி விடப்பட்டனர். அதன் பின்னர், இவர்கள் இருவரும் 20க்கும் குறைந்த சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இடம் பெற்றனர்.
#3.2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங்:
2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா மற்றும் அங்கீத் சவான் ஆகியோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மட்டுமல்லாது, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளருமான குருநாத் மெய்யப்பனும் இத்தகைய சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மும்பை போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டது. இதன் பின்னர், சென்னை அணியின் நிர்வாகத்துடன் மகேந்திர சிங் தோனியின் மேலும் பல்வேறு வதந்திகள் பரவின. எனவே, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது, ஐபிஎல் நிர்வாகம். எனவே, அந்த இரு ஆண்டுகளில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ஸ்ட்ஸ் எனும் புதிய அணியில் சேர்க்கப்பட்டார், மகேந்திரசிங் தோனி. ஈராண்டு தடைகளுக்கு பின்னர் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்தது.
#4.2019 ஐசிசி உலக கோப்பை தொடர்:
ஒருநாள் போட்டிகளில் தோனி தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார், தோனி. ஒரு காலத்தில் உலகின் தலைசிறந்த ஃபினிஷராக விளங்கிய தோனி 2019 உலகக்கோப்பை தொடரில் தனது மந்தமான ஆட்டத்தால் மிகவும் விமர்சிக்கப்பட்டார். நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி கண்டதால் சமூகவலைதளங்களில் மகேந்திர சிங் தோனியை பலரும் விமர்சித்தனர். இதுவரை தமது ஓய்வு பற்றி தோனி எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில் சில ஊடகங்களில் கூட வேண்டுமென்றே தனது ஓய்வினை அறிவிக்க வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த தோனியின் ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவர் ஓய்வு பெறக்கூடாது என வேண்டிக்கொண்டனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதல் 3 விக்கெட்களை இழந்து தவித்த இந்திய அணிக்கு நிதானமான ஆட்டம் தேவைப்பட்ட நிலையில், டோனிக்கு பதிலாக இளம் வீரர்கள் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த போட்டியில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உடன் இணைந்து நிதானமாக விளையாடிய தோனி தங்களது பார்ட்னர்ஷிப்பில் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் திரட்டினர். இருப்பினும், ஆட்டத்தின் இறுதி கட்ட நேரத்தில் தவறான ஷார்ட் தேர்வு மற்றும் ரன்-அவுட் போன்ற காரணங்களால் இவர்கள் விக்கெட்களை இழந்ததனால் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தொடரில் இருந்து வெளியேறியது.