மூன்றாவது உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்ய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் களமிறங்கினர். அப்போது இங்கிலாந்து ரசிகர்களால் டேவிட் வார்னரை அவமதிக்கும் வகையில் முழக்கமிட்டனர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் ஒரு வருட தடைக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியுள்ளார் டேவிட் வார்னர். கேப்டவுன் டெஸ்ட் தொடரில் நடந்த இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக திகழ்ந்தவர் டேவிட் வார்னர்.
மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியுள்ள டேவிட் வார்னர் நேரடியாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளார். உலகக் கோப்பை தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளது. ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை தொடருக்கு பிறகு 5 போட்டிகள் கொண்ட ஆஸஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிராக பங்கேற்க உள்ளது. எனவே ஆஸ்திரேலிய அணி சற்று அதிக காலம் இங்கிலாந்தில் விளையாடும்.
இக்கட்டான நெருக்கடி சூழ்நிலையில் டேவிட் வார்னர் இங்கிலாந்து ரசிகர்கள் கூட்டத்திற்கு முன் டேவிட் வார்னர் விளையாடுவது சற்று சிரமமாக இருக்கும். இங்கிலாந்து பொறுப்பு கேப்டன் ஜாஸ் பட்லர் டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் வழக்கமான கேப்டன் இயான் மோர்கன் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ஃபீல்டிங் பயிற்சியின்போது ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயத்தால் அவர் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
டேவிட் வார்னர் சிறப்பான தொடக்கத்தை ஆஸ்திரேலிய அணிக்கு அளித்தார். 55 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களை விளாசித் தள்ளினார். அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்தியன் பிரீமியர் லீக்கில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பங்கேற்று 12 போட்டிகளில் 692 ரன்களை விளாசி, அந்த தொடரில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
இதற்கிடையில் இங்கிலாந்து ரசிகர்கள் டேவிட் வார்னரை மோசடிக்காரர் என்ற வார்த்தையை பயன்படுத்தி கத்தினர். "மோசடி மன்னன் டேவிட் வார்னர் வெளியேறு" ரசிகர்கள் அவர் மீது தங்களது எதிர்பை வெளிபடுத்தினர்.
மறுமுனையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து ரசிகர்கள் மனநிலையை நன்கு புரிந்து வைத்துள்ளார்.
உலகக் கோப்பை அணிகளின் கேப்டன்கள் நேர்காணலில் ஆரோன் ஃபின்ச் கூறியதாவது,
உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரை கைப்பற்றி விட்டால், அதன்பின் நடைபெறவுள்ள ஆஸஸ் தொடரில் கண்டிப்பாக இங்கிலாந்து ரசிகர்கள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் எங்களின் மீது கண்டிப்பாக பெரும் வெறுப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இங்கிலாந்து ரசிகர்களின் வெளிபாட்டை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை நாங்கள் எப்போதும் வெளிபடுத்துவோம்.
ஆஸ்திரேலிய அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானித்தானிற்கு எதிராக ஜீன் 1 அன்று பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளது. இதற்கு முன் ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இரண்டாவது உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை மே 27 அன்று சவுத்தாம்டானில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் மோத உள்ளது.