பொதுவாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை, திறமையான வீரர்கள் தான் அணியில் விளையாடுவார்கள். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் அனைவரும், அதிக நுணுக்கங்களை தெரிந்து இருக்க வேண்டும். அதிக நுணுக்கங்களை தெரிந்து இருந்தால் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படும். இவ்வாறு இந்திய வீரர்கள் சிலர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசியுள்ளனர். அவர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) வீரேந்தர் சேவாக் ( 105 ரன்கள் )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், அதிரடிக்கு பெயர் போன வீரேந்தர் சேவாக். இவர் சிறப்பாக விளையாடி, நமது இந்திய அணியில் பல போட்டிகளில் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். தொடக்கத்தில் இருந்தே அதிக பவுண்டரிகளை விளாச கூடியதில் வல்லவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய இரண்டாவது வீரர் இவர்தான். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதினர். இந்த டெஸ்ட் போட்டியில் தான், முதன் முதலாக வீரேந்தர் சேவாக் அறிமுகம் செய்யப்பட்டார். அறிமுகமான முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி 105 ரன்கள் விளாசினார்.
#2) ரோகித் சர்மா ( 177 ரன்கள் )
ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பல முன்னணி வீரர்கள் இந்திய அணியில் இருப்பதால், இவருக்கு சரியாக வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. எனவே ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ரோகித் சர்மா நிரந்தரமாக விளையாடி வருகிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் இவர்தான்.
அது மட்டுமின்றி சர்வதேச டி20 போட்டிகளில் 4 முறை சதம் விளாசியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 2013 ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதினர். இந்த டெஸ்ட் போட்டியில் தான், முதன் முதலாக ரோகித் சர்மா அறிமுகம் செய்யப்பட்டார். அறிமுகமான முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி 177 ரன்கள் விளாசினார்.
#3) ஷிகர் தவான் ( 187 ரன்கள் )
தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் ஷிகர் தவான். நமது இந்திய அணியில் தற்போது, இவர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வருகிறார். இவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடக் கூடியவர். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதினர். இந்த டெஸ்ட் போட்டியில் தான், தவான் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டார். அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே எந்த பதட்டமும் இல்லாமல் அதிரடியாக விளையாடினார். தொடக்கத்திலிருந்தே சிறப்பாக விளையாடிய இவர் 250 பந்துகளில் 187 ரன்கள் விளாசினார்.