கிரிக்கெட் விளையாட்டு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். சிறுவயதில் இருந்தே ஆர்வத்துடன் விளையாடும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் மட்டும்தான். ஆனால் அதில் ஒரு சிலர் தான் அந்த விளையாட்டை தனது வாழ்க்கையாக மாற்றுகின்றனர்.
இவ்வாறு கிரிக்கெட் விளையாட்டை தனது வாழ்க்கையை மாற்றும் வீரர்களின் மிகப்பெரிய கனவு என்னவென்றால், நம் தாய் நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பை பெற வேண்டும் என்பது தான். இவ்வாறு தன் தாய் நாட்டிற்காக விளையாட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல், முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆன கேப்டன்களை பற்றி இங்கு காண்போம்.
#4) கேன் வில்லியம்சன்
தற்போது உள்ள நியூசிலாந்து அணியின் மிக முக்கியமான தூண் என்றால் அது கேன் வில்லியம்சன் தான். தொடக்கத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார். அதன் பின்பு தனது திறமையின் மூலம் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் கேப்டனாக மாறிய பிறகு அணியை பொறுப்புடன் வழிநடத்தி வருகிறார். நியூசிலாந்து அணியில் அனைத்துப் போட்டிகளிலும் சராசரியான ரன்களை அடித்து வருபவர் இவர் மட்டும் தான். இவர் முதன் முதலாக 2010ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக நடந்த போட்டியில் அறிமுகமானார். ஆனால் அந்த போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
#3) மேத்யூஸ்
தற்போது உள்ள இலங்கை அணியின் சிறந்த கேப்டன் மேத்யூஸ். சங்ககாரா போன்ற ஜாம்பவான்கள் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு, இலங்கை அணி சில வருடங்களாக தடுமாறி வந்தது. சிறப்பான வழி நடத்துதல் இல்லாமல் இலங்கை அணி திணறியது. அந்த சூழ்நிலையில் மேத்யூஸ் இலங்கை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்புதான் இலங்கை அணியின் தடுமாற்றத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் மேத்யூஸ். இலங்கை அணி மற்றும் ஜிம்பாப்வே அணி ஆகிய இரு அணிகளும் மோதிய போட்டியின் போது இவர் அறிமுகமானார். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த போட்டியில் இவர் டக் அவுட்டாகி வெளியேறினார்.
#2) தோனி
தோனி இந்திய அணியின் முன்னாள் தலை சிறந்த கேப்டன் மற்றும் தலைசிறந்த கீப்பர். இவர் சச்சின், சேவாக் இருந்த காலத்தில் இருந்து, இன்றுவரை விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைக்கிறார். எந்த சூழ்நிலையிலும் இந்திய அணியை பொறுமையாக கையாளக் கூடிய திறமை, இவரிடம் மட்டும்தான் உள்ளது.
இவரது இந்த பொறுமைதான் பல ரசிகர்களுக்கு இவரை பிடிப்பதற்கான காரணம். இவர் இந்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் விளையாட இருப்பதால், அனைத்து ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். உலக கோப்பை தொடரில் தோனி விளையாடுவது மிகவும் முக்கியம் என்று, பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்தினை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதன்முதலில் 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானார். அந்தப் போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
#1) சச்சின் டெண்டுல்கர்
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்பட்டு வரும் சச்சின் டெண்டுல்கர். சச்சின் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்து, அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவர்தான். இவ்வாறு பல சாதனைகளைப் படைத்த சச்சின் டெண்டுல்கர், அறிமுக போட்டியில் டக் அவுட் ஆனார் என்பது சற்று ஆச்சரியமாக தான் இருக்கிறது. 1989ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடிய முதல் போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறினார்.