டெல்லி அணி ஐ.பி.எல் தொடரில் ஒரு முறை கூட இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத ஒரே அணி என கூறலாம். அந்த அணியின் 50 சதவீத பங்குகளை ஜே.எஸ்.டபுள்யூ(JSW) குழுமம் கடந்த ஏப்ரல் மாதம் வாங்கியது. இதன் விளைவாக அந்த அணியின் பெயர் டெல்லி கேப்பிடல்ஸ் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அணியின் கேப்டன் ஆக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்துக்கு முன் டெல்லி அணி நிர்வாகம் மேக்ஸ்வெல், முகமது ஷமி, கிறிஸ்டியன், ஜேசன் ராய் போன்ற வீரர்களை விடுவித்தது. பின்னர் நடந்த டீரேட் விண்டோவில் அபிஷேக் சர்மா, ஷஃபாஸ் நதீம், விஜய் ஷங்கர் ஆகிய மூவரையும் கொடுத்து நட்சத்திர வீரர் ஷிகர் தவான் ஐ வாங்கியது.
இதனால்,டெல்லி அணியில் மொத்தம் 5 வெளி நாட்டு வீரர்கள் உள்பட15 வீரர்கள் மட்டுமே இருந்தனர். ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் அதிகபட்சமாக 25 வீரர்களை வைத்து கொள்ள முடியும். ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் டெல்லி அணி 10 வீரர்களை வாங்கியது.
2019 ஆம் ஆண்டு ஏலத்தில் வாங்கப்பட்ட முதல் வீரர் ஹனுமா விஹாரி. இவரை டெல்லி அணி 2 கோடிக்கு வாங்கியது.
பின்னர்,பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய வீரர் அக்சார் பட்டேலை 5 கோடி கொடுத்து வாங்கியது.
மூன்றாவதாக டெல்லி அணி உள்ளூர் வீரர் இஷாந்த் ஷர்மாவை 1.1 கோடிக்கு வாங்கியது. சென்ற முறை ஏலத்தில் இஷாந்த் ஷர்மாவை எந்த அணியும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய உள்ளூர் வீரர்களான அங்குஷ் பைன்ஸ் மற்றும் நாத்து சிங் இருவரையும் தலா 20 லட்சதுக்கு வாங்கியது டெல்லி.
பல்வேறு நாடுகளின் டி20 லீக் தொடர்களில் விளையாடியுள்ள தென் ஆப்ரிக்கா வீரர் காலின் இங்ரம் டெல்லி அணியால் 6.40 கோடிக்கு வாங்கப்பட்டார்.
ஏழவதாக கரீபியன் பிரீமியர் லீக்-இல் சிறப்பாக விளையாடிய விண்டீஸ் வீரர் ஷெர்பான் ருதேர்போர்டை 2 கோடிக்கு வாங்கியது.பின்னர்,அவரது சக நாட்டவரான கீமோ பால்-ஐ 50 லட்சத்திற்கு டெல்லி அணி வாங்கியது.
கடைசியாக ரஞ்சி கோப்பை போட்டியில் கேரள அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர் ஜலேஜ் சக்சேனாவையும், கர்நாடக வீரர் பண்டாரூ ஐயப்பாவையும் 20 லட்சத்திற்கு வாங்கியது டெல்லி அணி.
டெல்லி கேப்பிடல்ஸ் முழு அணி விவரம் : ஷிகர் தவான், மஞ்சோட் கல்ரா,பிருத்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்,அமித் மிஸ்ரா, கிறிஸ் மோரிஸ், கங்கிசொ ரபாடா, ட்ரெண்ட் போல்ட், காலின் மூண்ரோ,ஹர்ஷல் படேல்,அவேஷ் கான்,சந்தீப் லமச்சின்னே, ஜெயந்த் யாதவ்,ஹனுமா விஹாரி,அக்சார் படேல்,இஷாந்த் ஷர்மா,காலின் இங்ரம்,அங்குஷ் பைன்ஸ்,நாத்து சிங்,ஷெர்பான் ருதேர்போர்ட்,கீமோ பால்,ஜலேஜ் சக்சேனா, பண்டாரூ ஐயப்பா.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உத்தேச 11:
1)துவக்க வீரர்கள்(ஷிகர் தவான்,பிருத்வி ஷா)
அதிரடி வீரர்களான இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்க உள்ளனர்.
2)மிடில் ஆர்டர்(ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்,ஹனுமா விஹாரி,காலின் இங்ரம்)
ஐயர், பண்ட்,விஹாரி ஆகியோர் உடன் 200கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இங்ரம் இணைவதால் டெல்லி அணியின் மிடில் ஆர்டரில் டெல்லி அணி வலுபெற்றுள்ளது.
3)ஆல் ரவுண்டர்கள்(கிறிஸ் மோரிஸ் ,அக்சார் படேல்)
கிறிஸ் மோரிஸ் மற்றும் அக்சார் படேல் பந்துவீச்சு மட்டும் அன்றி வேகமாக ரன்கள் குவிப்பதிலும் வல்லவர்கள்.
4)பந்துவீச்சாளர்கள்(அமித் மிஸ்ரா,கங்கிசொ ரபாடா,ட்ரெண்ட் போல்ட்)
மிஸ்ரா, போல்ட், ரபாடா சிறப்பாக வீசி ஆட்டத்தின் போக்கை தங்கள் அணி பக்கம் திருப்புவதில் வல்லவர்கள்.