டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தின் இருக்கைக்கு விராட் கோலியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை டெல்லி கிரிக்கெட் அசோசியேசன் ஆகஸ்ட் 18 அன்று உறுதிபடுத்தியுள்ளது. டிடிசிஏ தலைவர் ராஜத் சர்மா மற்றும் அபெக்ஸ் கவுண்சில் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தின் ஒரு பகுதி இருக்கைக்கு விராட் கோலியின் சாதனையை கவுரவிக்கும் விதத்தில் "விராட் கோலி ஸ்டேன்ட்" என பெயர் சூட்டியுள்ளது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று மாபெரும் சாதனை புரிந்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக வீரரின் சொந்த மாநில மைதானத்தின் ஒரு பகுதி இருக்கையில் பெயர் இடம்பெறச் செய்வார்கள். பெரோஷா கோட்லா மைதானத்தில் இளம் மற்றும் தற்போது கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரரின் பெயர் இருக்கையில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான 11வது வருடத்தை கவுரவிக்கும் விதத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 11 வருடத்திற்கு முன் ஆகஸ்ட் 18 அன்று தம்புலாவில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் போட்டியில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
தற்போது உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்கிறார். விராட் கோலி தற்போது நம்பர் 1 டெஸ்ட் மற்றும் ஓடிஐ பேட்ஸ்மேன். விராட் கோலி தற்போது வரை 20,508 சர்வதேச ரன்களை மூன்று வகையான (டெஸ்ட், ஓடிஐ, டி20) கிரிக்கெட்டிலும் குவித்துள்ளார். இதில் 20,018 ரன்கள் 2010லிருந்து குவிக்கப்பட்டதாகும். 10 ஆண்டுகளில் (டிகெட்) 20,000ற்கும் மேலான ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேன் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி இதுவரை 67 சர்வதேச சதங்களை விளாசியுள்ளார். இதில் 25 சதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும், 43 சதங்கள் ஒருநாள் போட்டிகளிலும் அடித்துள்ளார். அத்துடன் 91 அரைசதங்களை (20 டெஸ்ட், 54 ஒடிஐ, 21 சர்வதேச டி20) கிரிக்கெட்டில் அடித்துள்ளார். விராட் கோலியின் வயது தற்போது 30. எனவே இவருக்கு இன்னும் பல கிரிக்கெட் போட்டிகள் உள்ளன. கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை படைக்க விராட் கோலி காத்துக்கொண்டுள்ளார். மேலும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் வலம் வருவார்.
டிடிசிஏ தலைவர் ராஜத் சர்மா கூறியதாவது,
" உலககிரிக்கெட்டில் விராட் கோலி தலைசிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருவதை கண்டு டெல்லி கிரிக்கெட் அசோசியேசன் பெருமிதம் கொள்கிறது. இவர் படைத்துள்ள சாதனைகள் மற்றும் சிறந்த கேப்டன்ஷீப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றிற்கு டெல்லி கிரிக்கெட் அசோசியேசன் அவரை கவுரவப் படுத்துகிறது.
'விராட் கோலி ஸ்டேன்ட்' அமைப்பதன் மூலம் டெல்லி இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும்.
இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்துவதற்காக டெல்லி கிரிக்கெட் அசோசியேசன் செப்டம்பர் 12 ஆம் தேதி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள பளுதூக்குதல் ஆடிட்டோரியத்தில் ஒரு விழாவை நடத்துகிறது.
பெரோஷா கோட்லா மைதானத்தில் உள்ள இருக்கையில் பிசன் சிங் பேடி மற்றும் மோஹீந்தர் அமர்நாத் ஆகியோரது பெயரை ஒரு பகுதியில் சூட்டப்பட்டுள்ளது. இவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே பெரோஷா கோட்லா மைதான இருக்கைப் பகுதியில் மோஹீந்தர் அமர்நாத் மற்றும் பிசன் சிங் பேடி பெயர் இடம்பெற்றது. விரேந்தர் சேவாக் மற்றும் அன்ஜீம் சோப்ரா ஆகிய டெல்லி வீரர்களின் பெயர்கள் பெரோஷா கோட்லா மைதானத்தின் கேட்டிற்கு சூட்டப்பட்டுள்ளது. டெல்லியின் ஹால் ஆஃப் பேம்-ஆக முன்னாள் இந்திய கேப்டன் எம்.ஏ.கே பட்டோடி பெயர் இருந்து வருகிறது.