ரஞ்சிக்கோப்பை : யுவராஜ் சிங் சொதப்பினாலும் மந்திப்சிங்கினால் 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.

யுவராஜ்  சிங்
யுவராஜ் சிங்

2018-19ற்கான ரஞ்சித் கோப்பை நவம்பர் 1-ல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் லீக் போட்டி நவம்பர் 28ஆம் தேதி டெல்லி கோட்லா மைதானத்தில் தொடங்கியது. இதில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.யுவராஜ் சிங் இந்த வருட ரஞ்சி சீசனில் தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியில் களமிறங்கினார்.அத்துடன் டெல்லி அணியினல் காயம் காரணமாக விலகியிருந்த கௌதம் காம்பீர் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

டெல்லி அணியின் தொடக்க வீரர்களான கௌதம் காம்பீர் மற்றும் ஹிட்டன் தலால் களமிறங்கினர். அனுபவ வீரர் கௌதம் காம்பீர் அர்பிட் பன்னு வீசிய சுழலில் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய அதிரடி வீரர் துருவ் சொரே 3 ரன்களில் சித்தார்த் கவுல் வீசிய பந்தில் போல்ட் ஆனார்.

சற்றுநேரம் நிலைத்து ஆடிய ஹிட்டன் தலால் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 18 ரன்களில் விநய் சௌத்ரி வீசிய பந்தில் அபிஷேக் குப்தாவிடம் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் நிதிஷ் ராணா 10 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சரை விளாசி சித்தார்த் கவுல் வீசிய பந்தில் போல்ட் ஆனார்.

Kaul
Kaul

அதற்குப் பின் களமிறங்கிய ஹிம்மட் சிங் 12 ரன்னிலும், குன்வர் பிதுரி 27 ரன்களிலும் தங்களது விக்கெட்டை விநய் சௌத்ரி-யிடம் கொடுத்தனர். அனுஜ் ரவட் மிகவும் பொறுமையாக விளையாடி 102 பந்துகளில் 22 ரன்களை அடித்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். டெல்லி அணி மொத்தமாக 42 ஓவர் விளையாடி 10 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை தனது முதல் இன்னிங்ஸில் அடித்தது. சித்தார்த் கவுல் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டெல்லி அணியை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, சிம்ரஜிட் சிங் வீசிய பந்தில் டக் அவுட் ஆனார். ஜிவ்னஜோட் சிங் மட்டும் பொறுமையாக விளையாடி 39 ரன்களை சேர்த்தார். பின்னர் ‌இவரும் விகாஸ் மிஸ்ரா ஓவரில் போல்ட் ஆனார்.

அதன்பின் களமிறங்கிய அன்மோல்பிரிட் சிங் மற்றும் மந்தீப் சிங் தங்களது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அன்மோல்பிரிட் சிங் 22 ரன்களில் தனது விக்கெட்டை விகாஸ் மிஸ்ரா-விடம் அளித்தார். அதைத் தொடர்ந்து " யுவராஜ் சிங் " களமிறங்கினார். அவர் 28 பந்துகளை எதிர்கொண்ட பிறகுதான் தனது முதல் ரன்களையே அடித்தார். மொத்தமாக 88 பந்துகளில் 24 ரன்களை அடித்து தனது விக்கெட்டை இழந்ததார்.

Mandeep Singh
Mandeep Singh

பின்னர் மந்திப் சிங் மற்றும் குர்கிரட் சிங் ஆகியோர் கைகோர்த்து சிறப்பாக விளையாடினர். கேப்டன் மந்திப் சிங் 180 பந்துகளில் 90 ரன்களை விளாசினார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும். குர்கிரட் சிங் 45 பந்தில் 40 ரன்களை அடித்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடங்கும்.70 வது ஓவரில் சிம்ரஜிட் சிங் வீசிய பந்தில் இருவரும் ஆட்டமிழந்தனர். அதன்பின் சித்தார்த் கவுல் மற்றும் மார்கண்டே 12 மற்றும் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மொத்தமாக பஞ்சாப் அணி முதல் இன்னிங்ஸில் 92 ஓவர்கள் விளையாடி 282 ரன்களை அடித்தது 10 விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக டெல்லி அணியில் சிம்ரஜிட் சிங் மற்றும் விகாஷ் மிஸ்ரா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸ் முடிவில் பஞ்சாப் அணி 175 ரன்கள் டெல்லியை விட முன்னிலையில் இருந்தது.

அதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணியில் காம்பீர் சிறப்பாக விளையாடி தனது அரை சதத்தை அடித்தார். இவர் மொத்தமாக 90 பந்துகளில் 60 ரன்களை அடித்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர்கள் உள்ளடங்கும். ஹிட்டன் தலால் 27 ரன்களும், வருண் சூட் 25 மற்றும் புலகிட் நரக் 31 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

Markandae
Markandae

டெல்லி இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தமாக 179 ரன்களை அடித்தது. பஞ்சாப் அணி சார்பில் விநய் சௌத்ரி 4 விக்கெட்டுகளும் , மார்கண்டே 3 விக்கெட்டுகளும், சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

டெல்லி அணி பஞ்சாப் அணியை விட 5 ரன்களே முன்னிலையில் இருந்ததால் தொடக்க வீரர்கள் 2 ஓவரில் ஆட்டத்தை முடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன்மூலம் பஞ்சாப் அணி இந்தவருட ரஞ்சிக்கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.பஞ்சாப் அணியில் சிறப்பாக விளையாடி 90 ரன்களை விளாசிய கேப்டன் மந்திப் சிங் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். ரஞ்சிக்கோப்பையில் கடந்த 5 வருடங்களில் டெல்லி அணி முதல்முறையாக தனது மண்ணில் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now